Images
  • Shamugam
    ( படம் : TODAY )

தீவிரவாதத்தை எதிர்த்துப் போராட இளையர்களின் ஒத்துழைப்பு அவசியம்: அமைச்சர் கா சண்முகம்

இணையத்தின் மூலம் ஒருவரைத் தீவிரவாத சித்தாந்தத்தின்பால் ஈர்க்க, சில ஆண்டுகள் அல்ல சில மாதங்களே போதும் என்று எச்சரித்துள்ளார் உள்துறை, சட்ட அமைச்சர் கா சண்முகம்.

இணையத்தின் மூலம் பரவும் பயங்கரவாதம், அதன் ஆபத்து ஆகியவை குறித்து இன்று நடைபெற்ற இளையர் கருத்தரங்கில் பேசினார் அவர்.

நல்லிணக்கத்தைப் பேணவும், தீவிரவாதத்தை எதிர்த்துப் போராடவும் இளையர்களின் ஒத்துழைப்பு அவசியம் என்றும் அவர் குறிப்பிட்டார்.

தீவிரவாத சித்தாந்தத்தின்பால் மூன்றிலிருந்து நான்கு நாட்களில் இளையர்கள் ஈர்க்கப்படலாம்; அதற்கு இணையம் ஏதுவாக இருக்கிறது; ஆனால் அவர்களை அடையாளம் காண்பது எளிதல்ல என்றும் அவர் கூறினார்.

சிங்கப்பூரில் இதுபோன்ற சம்பவங்கள் கட்டுக்குள் இருந்தாலும், அது தொடர்பாகக் கைது செய்யப்பட்டோர் எண்ணிக்கை அதிகரித்துவருவதைத் திரு. சண்முகம் சுட்டினார்.

சமயம் சார்ந்த தகவல்களைப் பெற நம்பகமான அமைப்புகளையோ, நபர்களையோ நாடுமாறு திரு. சண்முகம் கேட்டுக்கொண்டார்.

தொழில்நுட்பக் கல்விக் கழக வளாகத்தில் நடந்த கருத்தரங்கில் சுமார் 300 மாணவர்கள் கலந்துகொண்டனர்.
 

Top