Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

சிங்கப்பூர்

போதைப்பொருள் குற்றவாளிகளிக்குக் கடும் தண்டனை விதிப்பதைத் தவிர்ப்பது சாத்தியமல்ல: அமைச்சர் சண்முகம்

போதைப்பொருள் தொடர்பான குற்றங்களைப் புரியும் மலேசியர்களைக் கடுமையாக தண்டிக்காமல் இருப்பது சிங்கப்பூருக்கு ஏற்ற ஒன்று அல்ல என்று உள்துறை, சட்ட அமைச்சர் கா. சண்முகம் கூறியுள்ளார்.

வாசிப்புநேரம் -
போதைப்பொருள் குற்றவாளிகளிக்குக் கடும் தண்டனை விதிப்பதைத் தவிர்ப்பது சாத்தியமல்ல: அமைச்சர் சண்முகம்

(படம்: TODAY)


(வாசிப்பு நேரம்: 2 நிமிடத்திற்குள்)

போதைப்பொருள் தொடர்பான குற்றங்களைப் புரியும் மலேசியர்களைக் கடுமையாக தண்டிக்காமல் இருப்பது சிங்கப்பூருக்கு ஏற்ற ஒன்று அல்ல என்று உள்துறை, சட்ட அமைச்சர் கா. சண்முகம் கூறியுள்ளார்.

மத்திய போதைப்பொருள் ஒழிப்புப் பிரிவு இன்று நடத்திய வேலைத்திட்டக் கருத்தரங்கில் அவர் இதனைத் தெரிவித்தார்.

மலேசியரான 31 வயது பன்னீர்செல்வம் பரந்தாமனுக்கு இன்று நிறைவேற்றப்படவிருந்த மரணதண்டனையை மேல்முறையீட்டு நீதிமன்றம் நேற்றுத் தள்ளிவைத்தது.

அது பற்றி அமைச்சர் தமது உரையில் குறிப்பிட்டுப் பேசினார்.

2014 செப்டம்பரில் உட்லண்ட்ஸ் சோதனைச் சாவடியில் 51.84 கிராம் போதைமிகு அபினுடன் பிடிபட்டார் பன்னீர் செல்வம்.

50 கிராம் போதைமிகு அபினை நூற்றுக்கணக்கான போதைப்புழங்கிகள் ஒரு வாரத்திற்குப் பயன்படுத்தலாம்.

போதைப்பொருளைக் கடத்துபவர் மரணத்துடன் விளையாடுகிறார். இதை இரண்டு விதமாகப் பார்ப்பதற்கு எதுவும் இல்லை என்று திரு சண்முகம் கூறினார்.

மலேசியாவின் ஆளுங்கட்சியான பக்கட்டான் ஹரப்பானில் சிலர் மரணதண்டனையை எதிர்க்கின்றனர். அந்தச் சிந்தனையை மதிக்கவேண்டும் என்றும் அவர்கள் எதிர்பார்க்கின்றனர்.

சிங்கப்பூரில் மரணதண்டனை விதிக்கப்படுகிறது. அதனை மலேசியா மதிக்கும் என்று தாம் நம்புவதாகத் திரு சண்முகம் கூறினார்.

போதைப்பொருள் கடத்துபவர்களுக்கு மரணதண்டனை விதிப்பதை 69.6 விழுக்காட்டு சிங்கப்பூரர்கள் ஆதரிப்பதாக உள்துறை அமைச்சு நடத்திய ஆய்வு புலப்படுத்துவதை அவர் சுட்டினார்.

எல்லை தாண்டி நடக்கும் போதைப்பொருள் குற்றங்களைக் கையாள்வது பற்றி மலேசிய உள்துறை அமைச்சருடன் பேச்சு நடத்தத் திட்டமிட்டுள்ளதாக அமைச்சர் சண்முகம் சொன்னார்.
  

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்