Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

சிங்கப்பூர்

இஸ்லாத்துக்கு எதிரான உணர்வுகள் அதிகரித்து வருவதைச் சமூகங்கள் நேரடியாக எதிர்கொள்ள வேண்டும்: அமைச்சர் சண்முகம்

இஸ்லாத்துக்கு எதிரான உணர்வுகள் அதிகரிக்கும் உண்மையை சமூகங்கள் நேரடியாகவும் நேர்மையாகவும் எதிர்கொள்ள வேண்டும் என்று சட்ட, உள்துறை அமைச்சர் கா. சண்முகம் இன்று தெரிவித்துள்ளார்.

வாசிப்புநேரம் -
இஸ்லாத்துக்கு எதிரான உணர்வுகள் அதிகரித்து வருவதைச் சமூகங்கள் நேரடியாக எதிர்கொள்ள வேண்டும்: அமைச்சர் சண்முகம்

( படம்: TODAY )

(வாசிப்பு நேரம்: 1 நிமிடத்திற்குள்)

இஸ்லாத்துக்கு எதிரான உணர்வுகள் அதிகரிக்கும் உண்மையை சமூகங்கள் நேரடியாகவும் நேர்மையாகவும் எதிர்கொள்ள வேண்டும் என்று சட்ட, உள்துறை அமைச்சர் கா. சண்முகம் இன்று தெரிவித்துள்ளார்.

நியூஸிலந்தின் கிரைஸ்ட்சர்ச் நகரில் நடந்த கொடூரமான துப்பாக்கிச்சூட்டுச் சம்பவத்தை அடுத்து அமைச்சர் அவ்வாறு கூறினார். சம்பவத்தில் 49 பேர் மாண்டனர்.

துப்பாக்கிச்சூட்டுச் சம்பவத்திற்குக் கண்டனம் தெரிவித்த அமைச்சர், வெறுப்பைத் துண்டும் சித்தாந்தத்தை எதிர்கொள்ள வேண்டியதன் அவசியத்தைப் பற்றிப் பேசினார்.

அவ்வாறு, இஸ்லாத்துக்கு எதிரான உணர்வுகள் உடையவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கவேண்டும்.

முதலில் அத்தகையப் சித்தாந்தங்கள் உள்ளன என்பதை ஒப்புக்கொள்ளவேண்டும் என்றார் அமைச்சர் சண்முகம்.

சுதந்திரமான பேச்சு, வெறுப்பைத் தூண்டும் பேச்சு ஆகிய இரண்டையும் எவ்வாறு வேறுபடுத்துவது என்பது முக்கியக் கேள்வி என்று அமைச்சர் கூறினார்.

அதன் தொடர்பில் சிங்கப்பூர் ஓரளவு கடுமையான நெறிமுறைகளை வகுத்திருப்பதாக அவர் குறிப்பிட்டார்.

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்