Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

சிங்கப்பூர்

இந்தோனேசியப் பணிப்பெண் பார்ட்டி வழக்கு குறித்து நாடாளுமன்றத்தில் விவாதிப்பது நல்லது: அமைச்சர் சண்முகம்

இந்தோனேசியப் பணிப்பெண் பார்ட்டி லியானியின் வழக்கு குறித்து நாடாளுமன்றத்தில் வெளிப்படையாக விவாதிப்பது நல்லது என்று சட்ட, உள்துறை அமைச்சர் கா சண்முகம் தெரிவித்துள்ளார்.

வாசிப்புநேரம் -

இந்தோனேசியப் பணிப்பெண் பார்ட்டி லியானியின் வழக்கு குறித்து நாடாளுமன்றத்தில் வெளிப்படையாக விவாதிப்பது நல்லது என்று சட்ட, உள்துறை அமைச்சர் கா சண்முகம் தெரிவித்துள்ளார்.

வழக்கு தொடர்பாக நாடாளுமன்றத்தில் அமைச்சர்நிலை அறிக்கையை வெளியிடவிருப்பதாக அவர் கூறினார்.

பார்ட்டியின் வழக்கு கையாளப்பட்ட விதம் குறித்துக் கடந்த சில நாள்களாகத் தமது கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் சிலர், கேள்விகளை எழுப்பினர் என்று திரு சண்முகம் தெரிவித்தார்.

அடுத்த மாதம் நாடாளுமன்றம் கூடும்போது, "குற்றவியல் நீதிமுறையில் நியாயம்" தொடர்பில் தீர்மானம் கொண்டுவரப் பாட்டாளிக் கட்சித் தலைவர் திருவாட்டி சில்வியா லிம் இன்று விண்ணப்பித்துள்ளார்.

மக்கள் செயல் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் மட்டுமில்லாமல் பாட்டாளிக் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்களும் ஆர்வம் காட்டுவது ஆரோக்கியமானது என்று திரு சண்முகம் கூறினார்.  

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்