Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

சிங்கப்பூர்

பயங்கரவாத மிரட்டல்களின் தன்மை மாறிவிட்டது : அமைச்சர் கா.சண்முகம்

பயங்கரவாத மிரட்டல்களின் தன்மை கடந்த ஆண்டைக் காட்டிலும் மாறிவிட்டதாகச் சட்ட, உள்துறை அமைச்சர் கா. சண்முகம் கூறியிருக்கிறார்.

வாசிப்புநேரம் -

பயங்கரவாத மிரட்டல்களின் தன்மை கடந்த ஆண்டைக் காட்டிலும் மாறிவிட்டதாகச் சட்ட, உள்துறை அமைச்சர் கா. சண்முகம் கூறியிருக்கிறார்.

கதிஜா (Khadijah) பள்ளிவாசலில் நடைபெற்ற, சமய மறுவாழ்வுக் குழுவின் 16ஆவது கருத்தரங்கில் அவர் அவ்வாறு சொன்னார்.

ஐ. எஸ். பயங்கரவாத அமைப்பு பல நாடுகளில் அதன் கட்டுப்பாட்டில் இருந்த பகுதிகளை இழந்துவிட்டது.

அதன் முக்கியத் தலைவர்கள் கொல்லப்பட்டுவிட்டனர்.

இருப்பினும், அந்த அமைப்பு மறைமுகமான கட்டமைப்பாக இப்போது செயல்படுவதாக அமைச்சர் சண்முகம் குறிப்பிட்டார்.

சமூக ஊடங்களில் அதன் சித்தாந்தங்கள் தொடர்ந்து பரப்பப்படுகின்றன.

தென்கிழக்காசியா உட்பட, உலகம் முழுவதும் பயங்கரவாதச் சித்தாந்தங்களால் பலரும் ஈர்க்கப்பட்டு, தாக்குதல்கள் நடத்துவதற்குத் தூண்டப்படுவதாக அவர் சொன்னார்.

இந்த வட்டாரத்தில் மேற்கொள்ளப்படும் பயங்கரவாத முறியடிப்பு நடவடிக்கைகளால், தாக்குதல்களின் எண்ணிக்கை குறைந்திருப்பதை அமைச்சர் சுட்டினார்.

ஆனால், அவற்றுக்கு ஏற்ப பயங்கரவாதிகளும் மாறிவருவதாக அவர் சொன்னார். 

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்