Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

சிங்கப்பூர்

நாடாளுமன்றத்தில் இந்தியர்கள் பிரதிநிதிக்கப்படுவது எப்போதும் உறுதிசெய்யப்படும்: அமைச்சர் சண்முகம்

நாடாளுமன்றத்தில் இந்தியர்கள் பிரதிநிதிக்கப்படுவது எப்போதும் உறுதிசெய்யப்படும் என்று சட்ட, உள்துறை அமைச்சர் கா. சண்முகம். கூறியிருக்கிறார். 

வாசிப்புநேரம் -

நாடாளுமன்றத்தில் இந்தியர்கள் பிரதிநிதிக்கப்படுவது எப்போதும் உறுதிசெய்யப்படும் என்று சட்ட, உள்துறை அமைச்சர் கா. சண்முகம். கூறியிருக்கிறார்.

அதற்கு, குழுத்தொகுதி முறை வழிவகுப்பதாகச் சொன்னார் அவர்.

பொதுத்தேர்தல் பிரசாரத்துக்கான இறுதி நாளான இன்று, இந்தியச் சமூகத்தைச் சென்றடையும் வகையில் தமிழில், கலந்துரையாடல் ஒன்றை மக்கள் செயல் கட்சிச் சமூக ஊடகம் வழி நடத்தியது.

அதில் இளையர்களோடு அவர் கலந்துரையாடினார்.

நோய்ப்பரவலுக்கு இடையே பொதுத்தேர்தல் இடம்பெறுவது, பொருளியல், வேலைவாய்ப்புகள்-ஆகிய அம்சங்கள் குறித்து கட்சி முன்வைத்த கருத்துகளை நிறைவுசெய்யும் வகையில் அமைந்தது நிகழ்ச்சி.

இனம், சமயம் தொடர்பான கருத்துகளைத் திரு. சண்முகம் பகிர்ந்துகொண்டதோடு, இந்தப் பொதுத்தேர்தலில் மக்கள் செயல் கட்சி புதிய இந்திய வேட்பாளர்களை அறிமுகம் செய்யாதது குறித்த கேள்விகளுக்கும் பதிலளித்தார்.

மக்கள்தொகையில் இந்தியர்களின் விகிதம் 7.5 விழுக்காடு என்பதை அவர் குறிப்பிட்டார்.

முன்னைய நாடாளுமன்றத்தில் மக்கள் செயல் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்களாக 9 இந்தியர்கள் இருந்தனர். அவர்களில் 6 பேர் அமைச்சர் அல்லது துணையமைச்சர் பொறுப்பு வகித்தனர்.

அதன்படி, நாடாளுமன்றத்தில் இந்தியர்களின் விகிதம் சுமார் 10 விழுக்காடு என்பதையும் அமைச்சர் சண்முகம் சுட்டினார்.

இனம், சமயம் தொடர்பிலான உரையாடல்களை எந்த அடிப்படையில் நடத்தலாம் என்றும் அமைச்சரிடம் கேட்கப்பட்டது.

சொந்த இனம், சமயம் தொடர்பான உண்மைத் தகவல்களைத் தனிநபர்கள் பதிவுசெய்யலாம் என்று அதற்கு பதிலளித்தார் திரு. சண்முகம்.

மற்ற இனங்களையும் சமயங்களையும் குறைகூறும் வகையில் அவை அமையக்கூடாது என்றார் அவர்.

சிங்கப்பூரில், இதுவரை பின்பற்றப்படும் நிலைப்பாடு 55 ஆண்டுகளாக இன, சமய நல்லிணக்கத்தைக் கட்டிக்காத்து வந்துள்ளதாகச் சொன்னார் திரு. சண்முகம்.  

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்