Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

சிங்கப்பூர்

கிரைஸ்ட்சர்ச் தாக்குதல்: ஆஸ்திரேலிய செனெட்டரின் கருத்துகள் அருவருப்பானவை: அமைச்சர் சண்முகம்

நியூஸிலந்தின் கிரைஸ்ட்சர்ச் (Christchurch) தாக்குதல் குறித்து ஆஸ்திரேலிய செனெட்டர் (senator) ஃப்ரேஸர் என்னிங் (Fraser Anning) வெளியிட்ட கருத்துகள், இஸ்லாம் சமயத்திற்கு எதிரான வெறுப்புணர்வைக் கொண்டவை என்றும் அருவருப்பானவை என்றும் சட்ட, உள்துறை அமைச்சர் கா. சண்முகம் கூறியிருக்கிறார்.

வாசிப்புநேரம் -
கிரைஸ்ட்சர்ச் தாக்குதல்: ஆஸ்திரேலிய செனெட்டரின் கருத்துகள் அருவருப்பானவை: அமைச்சர் சண்முகம்

(படம்: TODAY)

நியூஸிலந்தின் கிரைஸ்ட்சர்ச் (Christchurch) தாக்குதல் குறித்து ஆஸ்திரேலிய செனெட்டர் (senator) ஃப்ரேஸர் என்னிங் (Fraser Anning) வெளியிட்ட கருத்துகள், இஸ்லாம் சமயத்திற்கு எதிரான வெறுப்புணர்வைக் கொண்டவை என்றும் அருவருப்பானவை என்றும் சட்ட, உள்துறை அமைச்சர் கா. சண்முகம் கூறியிருக்கிறார்.

அந்தச் சம்பவம் கொடூரமான படுகொலை என்று அமைச்சர் சண்முகம், நேற்று Facebookஇல் கண்டனம் தெரிவித்திருந்தார்.

நியூஸிலந்து அமைதியான, இன நல்லிணக்கத்துக்கு முன்மாதிரியாகத் திகழும் நாடு என்றார் அவர்.

அதனைத் தொடர்ந்து, ஆஸ்திரேலிய செனெட்டர் என்னிங் அந்தத் தாக்குதல் பற்றி கருத்துத் தெரிவித்தார்.

இஸ்லாம் வன்முறையைத் தூண்டும் சமயம் என்றும் கடுமையான சித்தாந்தங்களைக் கொண்டது என்றும் அவர் கூறினார்.

நபிகள் நாயகத்துக்கு எதிராகவும் அவர் கருத்துரைத்தார்.

நேற்றைய தாக்குதலுக்கு முஸ்லிம் குடியேறிகளே காரணம் என்றும் செனெட்டர் என்னிங் கூறியிருந்தார்.

அந்தக் கருத்துகள் அருவருப்பானவை என்றும் முற்றிலும் ஏற்றுக்கொள்ள முடியாதவை என்றும் அமைச்சர் சண்முகம் சொன்னார்.

மக்கள் துயரத்தில் ஆழ்ந்திருக்கும் தருணத்தில் செனெட்டர் என்னிங் அவ்வாறு கூறியிருப்பதையும் அமைச்சர் சண்முகம் குறிப்பிட்டார்.

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்