Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

சிங்கப்பூர்

நெருக்கமான துணையால் துன்புறுத்தப்படுவோருக்கு அதிகப் பாதுகாப்பு தேவை : அமைச்சர் சண்முகம்

நெருக்கமான துணையால் துன்புறுத்தப்படுவோருக்கு அதிகப் பாதுகாப்பு தேவை என்று உள்துறை, சட்ட அமைச்சர் கா சண்முகம் கூறியுள்ளார்.

வாசிப்புநேரம் -
நெருக்கமான துணையால் துன்புறுத்தப்படுவோருக்கு அதிகப் பாதுகாப்பு தேவை : அமைச்சர் சண்முகம்

படம்: TODAY

நெருக்கமான துணையால் துன்புறுத்தப்படுவோருக்கு அதிகப் பாதுகாப்பு தேவை என்று உள்துறை, சட்ட அமைச்சர் கா சண்முகம் கூறியுள்ளார்.

பாதிக்கப்படுவோர், 24 மணி நேரத்திற்குள் பாதுகாப்பு ஆணை பெறுவது சாத்தியமாகலாம் என்றார் அவர்.

அச்சுறுத்தலில் இருந்து பாதுகாக்கும் சட்டத்தில் பரிந்துரைக்கப்படும் மாற்றங்களில் அதுவும் ஒன்று.

பாதிக்கப்பட்டவர்களின் வழக்கை விசாரிக்க புதிய நீதிமன்றம் அமைப்பது, பாதுகாப்பு உத்தரவுக்கு விண்ணப்பிக்கும் செயல்முறைகளை எளிமையாக்குவது ஆகியவை பரிந்துரைக்கப்பட்ட மாற்றங்களில் அடங்கும்.

குற்றவியல் சட்டத்தில் பரிந்துரைக்கப்பட்ட மாற்றங்களுக்கு மேற்பட்டு, புதிய மாற்றங்கள் கொண்டுவரப்படலாம்.

குற்றவியல் சட்ட சீர்திருத்த மசோதாவின் இரண்டாவது வாசிப்பில், திருத்தங்கள் அறிமுகப்படுத்தப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

அது மே மாதம் நடைபெறக்கூடும்.

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்