Images
  • Shanmugam
    (படம்: TODAY) 

கஞ்சாவை மருத்துவத்திற்காகப் பயன்படுத்தும் போக்கு அர்த்தமற்றது: அமைச்சர் சண்முகம்


கஞ்சாவை மருத்துவத்திற்காகப் பயன்படுத்தும் போக்கு
"பணம், கொள்கைப் பிரசாரம்" சம்பந்தப்பட்டது என்று சட்ட, உள்துறை அமைச்சர் கா சண்முகம் சேனல் நியூஸ் ஏஷியாவிடம் கூறியுள்ளார்.

சிங்கப்பூரில் கஞ்சா, தொடர்ந்து சட்டவிரோத போதைப்பொருளாகவே வகைப்படுத்தப்படும் என்பதை அதிகாரிகள் மறுவுறுதிப்படுத்தியதைத் தொடர்ந்து அவர் அவ்வாறு கூறினார்.

கஞ்சா அடிமைப்படுத்தும் அபாயமுள்ள, உடல் நலத்துக்குத் தீங்கு விளைவிக்கும் போதைப்பொருள் என்பதை அதிகாரிகள் நேற்று (பிப்ரவரி 13) சுட்டிக்காட்டினர்.

சென்ற டிசம்பரில், மருத்துவக் காரணங்களுக்காகக் கஞ்சாவைப் பயன்படுத்துவதற்குத் தாய்லந்து அரசாங்கம் அனுமதி அளித்தது.

தென்கிழக்கு ஆசியாவில் அத்தகைய அனுமதி வழங்கிய முதல் நாடு தாய்லந்து.

சிங்கப்பூரிலும் கஞ்சாவைப் பயன்படுத்துவதற்கு அதிகாரபூர்வ அனுமதி வழங்கவேண்டும் என்று சில தரப்புகள் கோரிக்கை விடுத்து வருகின்றன.




Top