Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

சிங்கப்பூர்

வித்தியாசமான பாதையில் பயணம் செய்யவுள்ள தமிழ் மின் மரபுடைமைக் குழு

தமிழ் மின் மரபுடைமைக் குழு புதிய பாதையில் இந்த ஆண்டு முதல் பயணம் செய்யவுள்ளது.

வாசிப்புநேரம் -
வித்தியாசமான பாதையில் பயணம் செய்யவுள்ள தமிழ் மின் மரபுடைமைக் குழு

(படம்: ஷரளா தேவி)

(வாசிப்பு நேரம்: 1 நிமிடத்திற்குள்)


தமிழ் மின் மரபுடைமைக் குழு புதிய பாதையில் இந்த ஆண்டு முதல் பயணம் செய்யவுள்ளது.

இதுவரை அந்தக் குழு, சிங்கப்பூரில் தமிழ்மொழி சார்ந்த இலக்கியம், நாடகம், இசை, நடனம் ஆகியவற்றை உள்ளடக்கிய மின்தொகுப்புகளைத் தொகுத்து வந்தது.

இந்த ஆண்டு தொகுப்பு முயற்சி நிறைவுபெற்றவுடன் குழுவைக் கலைக்க திட்டம் இருந்தது.

ஆனால், அந்தத் திட்டம் மாற்றங்கண்டு இப்போது புதியதொரு அமைப்பு உருவாகியுள்ளது.

அடித்தள, லாப நோக்கற்ற, மெய்நிகர் அமைப்பாகச் செயல்படும் அது, தமிழ் மின் மரபுடைமைக் குழுவையும் உள்ளடக்கியிருக்கும்.

மேலும் பல நடவடிக்கைகளை மேற்கொள்ளவிருக்கும் அமைப்பு, சிங்கப்பூரின் மரபணுவைப் பகிரவுள்ளது.

சிங்கப்பூர்த் தமிழ்ப் பண்பாட்டு மையம் என்பது அமைப்பின் பெயர்.



விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்