Images

தேவையுடையோருக்கு உதவ முன்வரும் மாணவர்களுக்குக் கூடுதல் வாய்ப்புகள்

(வாசிப்பு நேரம்: 1 நிமிடம்)

தேவையுடையோருக்கு உதவுவதில் தொண்டூழியர்களாக விரும்பும் உயர்நிலைப் பள்ளி மாணவர்களுக்குக் கூடுதல் வாய்ப்புகள் கிடைக்கவிருக்கின்றன.

இம்மாதத் தொடக்கத்தில் அனைத்து உயர்நிலைப் பள்ளிகளிலும் புதிய தொண்டூழியத் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது.

Sharity Day நிகழ்ச்சியில் கலந்துகொண்ட கல்வியமைச்சர் ஓங் யீ காங் அதனை அறிவித்தார்.

நிகழ்ச்சியில் சக மாணவர்கள் சிறப்புத் தேவையுடைய மாணவர்களுடன் சேர்ந்துபழக ஊக்குவிக்கப்பட்டது.

தொண்டூழியர்களாகப் பதிந்துகொள்ளும் இளையர்கள் சமூக உண்டியல் ஏற்பாடு செய்யும் தொண்டூழிய நிகழ்ச்சிகளில் கலந்துகொள்ளலாம்.


Top