Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

சிங்கப்பூர்

Shell நிறுவன முன்னாள் ஊழியர்கள் மூவர் மீது ஊழல் குற்றச்சாட்டு

Shell நிறுவனத்தின் முன்னாள்  ஊழியர்கள் மூவர் மீது மேலும் 

வாசிப்புநேரம் -
Shell நிறுவன முன்னாள் ஊழியர்கள் மூவர் மீது ஊழல் குற்றச்சாட்டு

(படம்: Raj Nadarajan/TODAY)

Shell நிறுவனத்தின் முன்னாள் ஊழியர்கள் மூவர் மீது மேலும்
ஊழல் குற்றச்சாட்டுகள் (பிப்ரவரி 23) பதிவு செய்யப்பட்டுள்ளன.

Shell Bukom எண்ணெய் எரிவாயுவைத் திருடியதாக முன்னர் அவர்கள் மீது காவல்துறை குற்றஞ்சாட்டியிருந்தது.

அந்த மூவரும், 2014-இலிருந்து 2017 வரை, மொத்தம் 116,900 டாலர் கையூட்டுக் கொடுத்ததாகவோ, அதற்காகத் திட்டமிட்டதாகவோ சந்தேகிக்கப்படுகிறது.

Shell எரிபொருள் வழங்கும் கப்பல்களை ஆய்வு செய்யும் பணியில் பல்வேறு நிறுவனங்கள் ஈடுபட்டிருந்தன.

கப்பல்களில் ஏற்றப்பட்ட எண்ணெய் எரிவாயு அளவைத் துல்லியமாகச் சொல்வதைத் தவிர்ப்பதற்காகக் ஆய்வு நடத்தவரும் ஊழியர்களுக்கு அந்த மூவரும் லஞ்சம் கொடுத்ததாக சந்தேகிக்கப்படுகிறது.

குற்றஞ்சாட்டப்பட்டவர்கள்:

  • 44 வயது சிங்கப்பூரர் Juandi Bin Pungot (13 ஊழல் குற்றச்சாட்டுகள் எதிர்நோக்குகிறார்)
  • 40 வயது சிங்கப்பூர் ஆடவர் Muzaffar Ali Khan Bin Muhamad Akram (13 ஊழல் குற்றச்சாட்டுகள் எதிர்நோக்குகிறார்)

2014 இலிருந்து 2017 வரை: Juandi, Muzaffar ஆகியோர் Shell நிறுவனத்தில் பணிபுரிந்தனர்.

அவர்கள் கணக்கெடுப்பு ஊழியர்கள் 10 பேருக்கு 91,900
டாலர் லஞ்சம் கொடுக்கத் திட்டமிட்டதாகச் சந்தேகிக்கப்படுகிறது.

  • 51 வயது சிங்கப்பூர் நிரந்தரவாசி Richard Goh Chee Keong (4 ஊழல் குற்றச்சாட்டுகள்)

2016 இலிருந்து 2017 வரை: Richard, Shell நிறுவனத்தில் பணிபுரிந்தார்.

அவர் 3 கணக்கெடுப்பு ஊழியர்களுக்கு 25,000 டாலர் லஞ்சம் கொடுத்ததாக சந்தேகிக்கப்படுகிறது.

ஊழல் குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டால், 100,000 வெள்ளி அபராதம், அல்லது 5 ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை அல்லது இரண்டும் விதிக்கப்படலாம்.

 

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்