Images
  • Shell Heist
    (படம்: AFP)

ஜூரோங் தீவில் ஆய்வு, மேம்பாட்டுப் பணிக்குத் தளம் அமைக்கும் Shell நிறுவனம்

எரிபொருள் நிறுவனமான Royal Dutch Shell, சிங்கப்பூரில் அதன் ஆய்வு, மேம்பாடு தொடர்பான முதலீடுகளை விரிவுபடுத்தவுள்ளது.

வாகன முன்விளக்குகளையும் கண்ணாடிகளையும் உருவாக்கப் பயன்படும் polycarbonate வகை பிளாஸ்டிக் பொருளை உற்பத்தி செய்வதற்கான சோதனையை நிறுவனம் மேற்கொள்ளும்.

ஜூரோங் தீவில் தற்போது செயல்பட்டு வரும் ரசாயன ஆலையில் அதன் புதிய தளம் அமைக்கப்படும்.

நிறுவனத்தின் வளர்ச்சிக்கு வெவ்வேறு வகையான பொருள்களை உருவாக்குவது முக்கியம் என்று Shell நிறுவனம் குறிப்பிட்டது.

அதை முன்னிட்டு, சீனாவில் உற்பத்திப் பிரிவை அமைப்பதற்கான இணக்கக் குறிப்பிலும் Shell நிறுவனம் கையெழுத்திட்டது.  

Top