Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

சிங்கப்பூர்

சிங்கப்பூரில் முற்றிலும் மின்சாரத்தில் இயங்கக்கூடிய முதல் பயணிகள் படகுச் சேவை

சிங்கப்பூரில் முற்றிலும் மின்சாரத்தில் இயங்கக்கூடிய முதல் பயணிகள் படகுச் சேவை

வாசிப்புநேரம் -
சிங்கப்பூரில் முற்றிலும் மின்சாரத்தில் இயங்கக்கூடிய முதல் பயணிகள் படகுச் சேவை

படம்: Incat Crowther UK

சிங்கப்பூரில், முற்றிலும் மின்சாரத்தில் இயங்கும், முதல் பயணிகள் படகுச் சேவையை Shell நிறுவனம் தொடங்கவிருக்கிறது.

அதற்கான குத்தகையை Penguin International Limited நிறுவனத்துக்கு Shell வழங்கியிருக்கிறது.

முற்றிலும் மின்சாரத்தில் இயங்கும் 3 பயணிகள் படகுகளை வடிவமைத்து, கட்டி, இயக்க அந்தக் குத்தகை வகைசெய்யும்.

அந்தப் பயணிகள் படகுகள் 2023ஆம் ஆண்டின் முன்பாதியில் சேவையைத் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

200 இருக்கைகள் கொண்ட பயணிகள் படகுகள், சிங்கப்பூர்ப் பெருநிலத்துக்கும், புகோம் (Bukom) தீவில் உள்ள Shell நிறுவனத்தின் எரிசக்தி, ரசாயனத் தொழிற்பேட்டைக்கும் இடையே பயணிகளை ஏற்றிச் செல்லும்.

தற்போது டீசலைக் கொண்டு இயங்கும் பயணிகள் படகுகளுக்குப் பதிலாக அவை பயன்படுத்தப்படும்.

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்