Images
  • Shell Heist
    (படம்: AFP)

Shell ஆலையிலிருந்து $3.5 மில்லியன் மதிப்புள்ள எண்ணெயைக் களவாடிய சம்பவம்: சம்பந்தப்பட்ட தலைமை அதிகாரிக்குச் சிறை


புலாவ் புக்கோமில் அமைந்திருக்கும் Shell ஆலையிலிருந்து களவாடப்பட்ட 3.5 மில்லியன் வெள்ளி மதிப்புள்ள எண்ணெயைப் பெற்ற கப்பலின் தலைமை அதிகாரிக்கு இரண்டரை ஆண்டுச் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

வியாட்நாமைச் சேர்ந்த 38 வயது டாங் வான் ஹான் (Dang Van Hanh) தன்மீது சுமத்தப்பட்ட கையாடல் குற்றச்சாட்டை ஒப்புக்கொண்டுள்ளார்.

Shell ஊழியர்களைக் கொண்ட இரு கும்பல்கள் தொடர்பான அச்சம்பவத்தின் தொடர்பாக குற்றத்தை ஒப்புக்கொண்டுள்ள முதல் நபர் டாங்.

2016 ஜூலை 31க்கும் 2018 ஜனவரி 7க்கும் இடைப்பட்ட காலத்தில் 4 சந்தர்ப்பங்களில் சுமார் 5,600 டன் களவாடப்பட்ட எண்ணெயைப் பெற உதவியிருக்கிறார் டாங்.

2018 ஜனவரி 7 அன்று காவல்துறையின் திடீர்ச் சோதனையில் அவர் கையும் களவுமாகப் பிடிபட்டார்.

அதனைத் தொடர்ந்து சிங்கப்பூரின் பல்வேறு பகுதிகளில் மேலும் பல சந்தேக நபர்கள் கைதுசெய்யப்பட்டனர்.

களவாடப்பட்ட பொருளைப் பெற்ற இரு குற்றச்சாட்டுகளை டாங் ஒப்புக்கொண்டார். மேலும் இரு குற்றச்சாட்டுகளைக் கருத்திற்கொண்டு அவருக்கான தண்டனை நிர்ணயிக்கப்பட்டது.



 

Top