Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

சிங்கப்பூர்

தென்கொரியாவில் கிருமிப்பரவலைப் பரப்பியதாய் நம்பப்படும் சமயக் குழுவின் இடங்களில் சோதனை

தென்கொரியாவில் பெரிய அளவில் COVID-19 கிருமிப்பரவலை ஏற்படுத்தியதாய்க் குறைகூறப்படும் சமயக் குழுவொன்றுக்குச் சொந்தமான இடங்களில் அதிரடிச் சோதனை நடத்தப்பட்டுள்ளது.

வாசிப்புநேரம் -
தென்கொரியாவில் கிருமிப்பரவலைப் பரப்பியதாய் நம்பப்படும் சமயக் குழுவின் இடங்களில் சோதனை

(படம்: AFP)

தென்கொரியாவில் பெரிய அளவில் COVID-19 கிருமிப்பரவலை ஏற்படுத்தியதாய்க் குறைகூறப்படும் சமயக் குழுவொன்றுக்குச் சொந்தமான இடங்களில் அதிரடிச் சோதனை நடத்தப்பட்டுள்ளது.

Shincheonji தேவாலயத்தின் அனைத்துக் கிளைகளிலும் சுமார் 100 புலனாய்வாளர்கள் சோதனைகளை நடத்தினர்.

தேவாலயத்தின் தலைவர் கிருமிப்பரவல் தடுப்புச் சட்டங்களுக்குப் புறம்பாகச் செயல்பட்டதாய் அங்கு வழிபடுவோர்
புகார் செய்ததைத் தொடர்ந்து சோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

தென்கொரியாவில் கிருமிப்பரவல் தொடங்கிய காலக்கட்டத்தில், சுகாதார அதிகாரிகளுடன் ஒத்துழைக்கத் தவறியதாகவும் தேவாலயத்தின்மீதும் அதன் தலைவர்மீதும் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
 
விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்