Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

சிங்கப்பூர்

சட்டை வாசகங்களுக்கு மன்னிப்புக் கேட்கும் சொகுசு நிறுவனங்கள்

ஆடம்பரப் பொருள்களை விற்பனை செய்யும் நிறுவனங்களான Coach, Givenchy-ஆகியவை, தங்கள் ஆடைகளில் இடம்பெற்ற தவறான வார்த்தைகளுக்கு மன்னிப்புக் கோரியுள்ளன. 

வாசிப்புநேரம் -
சட்டை வாசகங்களுக்கு மன்னிப்புக் கேட்கும் சொகுசு நிறுவனங்கள்

(படம்: Weibo/Sina Fashion)

ஆடம்பரப் பொருள்களை விற்பனை செய்யும் நிறுவனங்களான Coach, Givenchy-ஆகியவை, தங்கள் ஆடைகளில் இடம்பெற்ற தவறான வார்த்தைகளுக்கு மன்னிப்புக் கோரியுள்ளன.

Versace நிறுவனத்தின் மன்னிப்பைத் தொடர்ந்து மற்ற நிறுவனங்களும் மன்னிப்புக் கோரியுள்ளன.

அந்த நிறுவனங்களின் டி-சட்டைகளில் நாடுகளும் அவற்றின் தலைநகரங்களும் பட்டியலிடப்பட்டிருந்தன.

சீன ஆளுகைக்கு உட்பட்ட ஹாங்காங், மக்காவ், தைவானைத் தனி நாடுகளைப் போல அந்தப் பட்டியல் குறிப்பிட்டதால், சீனாவில் பலர் கண்டனம் தெரிவித்தனர்.

குறிப்பாக, ஹாங்காங்கில் அரசாங்க எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்கள் கடுமையாகி வரும் நிலையில் அந்தப் பிரச்சினை பலரின் கவனத்தை ஈர்த்துள்ளது.

சீனாவில், அந்த ஆடம்பர நிறுவனப் பொருள்களை விளம்பரம் செய்த நட்சத்திரங்கள் சிலர், விளம்பர ஒப்பந்தத்திலிருந்து விலகிக்கொள்வதாக அறிவித்துள்ளனர்.

தவறான வாசகங்கள் உள்ள சட்டைகளை மீட்டுக்கொண்டதாக Coach தெரிவித்தது.

Givenchy நிறுவனம் 'ஒரு சீனா' கொள்கையை ஆதரிப்பதாகவும் சீனாவின் அரசுரிமையை மதிப்பதாகவும் Weibo வழியாகத் தெரிவித்தது.  

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்