Images
  • shoebill birds
    (படம்: Wildlife Reserves Singapore)

ஜூரோங் பறவைப் பூங்காவிற்கு வரவிருக்கும் அரியவகைப் பறவை

நீங்கள் பறவைப் பிரியரா? உங்களுக்கு ஒரு நற்செய்தி.

ஷூபில் (Shoebill) எனப்படும் 2 அரியவகைப் பறவைகள் ஜூரோங் பறவைப் பூங்காவிற்கு வரவிருக்கின்றன.

கத்தாரிலிருந்து வரவழைக்கப்பட்டுள்ள ஷூபில் பறவைகள் சதுப்புநிலப் பறவை இனங்களுடன் வைத்திருக்கப்படும்.

தென்கிழக்காசியாவிலுள்ள விலங்கியல் பூங்காக்களில், ஜூரோங் பறவைப் பூங்காவில் மட்டுமே இப்பறவைகளைக் காண முடியும் என்று சிங்கப்பூர் வனவிலங்குக் காப்பகம் அறிவித்தது.

கிழக்கு ஆப்பிரிக்காவில் அதிகமாகக் காணப்படும் ஷுபில் பறவைகள் அழிந்துவரும் பறவைகளில் ஒன்றாகக் கருதப்படுகிறது.

சுற்றுப்புறச் சூழல் பாதிப்பாலும் சட்டவிரோதமாக வர்த்தகம் செய்யப்படுவதாலும் ஷூபில் பறவை வகை மறைந்துகொண்டே வருகிறது.

மனிதர்களின் பராமரிப்பில் தற்போது 30 ஷுபில் பறவைகளே இருப்பதாகக் கூறப்பட்டுள்ளது.

வனத்தில் 5,000இலிருந்து 8,000 ஷுபில் பறவைகள் இருக்கக்கூடும் என நம்பப்படுகிறது.

மீன்களை மட்டுமே பெரும்பாலும் சாப்பிடும் ஷுபில் பறவைகள், பாம்புகள், முதலைக் குஞ்சுகளையும் உட்கொள்ளக்கூடியவை.


 

Top