Images
  • Shopee
    (படம்: CNA) 

Shopee மின் வர்த்தகத் தளத்தில் பரிவர்த்தனைகளுக்குக் கட்டணம் அறிமுகம்

சிங்கப்பூர் தொழில்நுட்ப நிறுவனமான SEA நிர்வகித்து வரும் Shopee, மின் வர்த்தகத் தளம், அடுத்த மாதம் முதல் அனைத்து வெற்றிகரமான பரிவர்த்தனைகளுக்கும் ஒரு விழுக்காடு பரிவர்த்தனைக் கட்டணத்தை விற்பனையாளர்களிடம் வசூலிக்கவிருக்கின்றது.

வங்கி பணமாற்று முறை, கடன்பற்று அட்டை, Shopee கட்டண முறை ஆகியவற்றின் மூலம், அந்தக் கட்டணம் வசூலிக்கப்படும் என்று SEA நிறுவனம் கூறியது.

அவ்வாறு வசூலிக்கப்படும் ஒரு விழுக்காடு பரிவர்த்தனைக் கட்டணம், நிறுவனங்கள் பணத்தைக் கையாள்வதற்கான செயல்முறைக் கட்டணம் என்று கூறிய அந்நிறுவனம், Shopee தொடர்ந்து தரகு அற்ற தளமாக இயங்கி வருவதை சுட்டியது. Channel News Asia-விற்கு அளித்த பேட்டியில் அது அந்தக் கருத்தை முன் வைத்தது.

சிங்கப்பூரில் உள்ள விற்பனையாளர்களிடம் அடுத்த மாதம் ஒன்றாம் தேதி முதல் அந்தக் கட்டணம் வசூலிக்கப்படத் தொடங்கும்.   

Top