Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

சிங்கப்பூர்

'கட்டாயமாக வீட்டில் தங்குவதற்கான உத்தரவு' குறித்த விவரம் மின்னஞ்சல் மூலம் முன் கூட்டியே தெரிவிக்கப்படும்

'கட்டாயமாக வீட்டில் தங்குவதற்கான உத்தரவு' குறித்த விவரம் மின்னஞ்சல் மூலம் முன் கூட்டியே தெரிவிக்கப்படும்

வாசிப்புநேரம் -

சிங்கப்பூருக்கு வரவிருக்கும் பயணிகளிடம், 'கட்டாயமாக வீட்டில் தங்குவதற்கான உத்தரவு' குறித்த விவரம் மின்னஞ்சல் மூலம் முன் கூட்டியே தெரிவிக்கப்படும் என்று குடிநுழைவுச் சோதனைச் சாவடிகள் ஆணையம் அறிவித்துள்ளது.

அதன் மூலம் யார் யாரெல்லாம் கட்டாயமாக வீட்டில் தங்க நேரிடும் என்பதைக் குடிநுழைவுச் சோதனைச் சாவடிகளை அடைவதற்கு முன்னர் ஒவ்வொரு பயணியும் அறிந்துகொள்ள முடியும் என்று ஆணையம் குறிப்பிட்டது.

நாளை காலை 9 மணியிலிருந்து அந்த மின்னஞ்சல்கள் அனுப்பப்படும்.

14 நாள்கள் வீட்டில் தங்கும் உத்தரவிடப்பட்ட பிறகு, அதைப் பின்பற்றத் தவறினால் ஏற்படும் விளைவுகள் பற்றியும் மின்னஞ்சலில் குறிப்பிடப்பட்டிருக்கும்.

வெளிநாடுகளிலிருந்து சிங்கப்பூர் திரும்புவோரிடையே COVID-19 கிருமிப் பரவல் சம்பவங்கள் அதிக அளவில் பதிவாகிவரும் வேளையில், ஆணையம் அதுகுறித்த முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளைத் தீவிரப்படுத்தியுள்ளது.

நாளையிலிருந்து சிங்கப்பூர் வரும் அனைவரும் குடிநுழைவுச் சோதனைகளை மேற்கொள்வதற்கு முன், சுகாதார அறிக்கையை இணையம் வழி பூர்த்தி செய்யவேண்டும்.

சிங்கப்பூருக்கு வருவதற்கு மூன்று நாட்களுக்கு-முன் அதை அவர்கள் சமர்ப்பிக்கலாம்.

அதையடுத்து சுகாதார அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டுவிட்டதாக பயணிகளுக்கு 24 மணி நேரத்துக்குள் பதில் மின்னஞ்சல் அனுப்பி வைக்கப்படும்.

சிங்கப்பூருக்கு வரும்போது
அதை அவர்கள் அதிகாரிகளிடம் காண்பிக்கவேண்டும்.  

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்