Images
  • SIA (1)
    (படம்: AFP/Roslan Rahman)

சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் விமானத்தில் மதுபோதையில் பிரச்சினை செய்த ஆடவருக்குச் சிறை

சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் விமானத்தில் மதுபோதையில் பிரச்சினை செய்த ஆடவருக்கு 3 வாரச் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

ரஷ்யாவைச் சேர்ந்த ரோமன் என்ற 37 வயது ஆடவர் விமானத்தில் பயணம் செய்து கொண்டிருந்தபோது அளவுக்குமீறி மது அருந்தியிருக்கிறார்.

மதுபோதையில் சக பயணிகளிடம் தகராறு செய்துள்ளார் அவர்.

அதைத் தொடர்ந்து ஆடவரை அமைதியாக இருக்கும்படிக் கூறிய விமானச் சிப்பந்திகளிடம் அவர் கடுமையான வார்த்தைகளைப் பயன்படுத்தினார்.

ஆடவர் செய்த பிரச்சினைகள் குறித்துக் காவல்துறையினரிடம் புகார் கொடுக்கப்பட்டது. அதையடுத்து அவர் சாங்கி விமான நிலையத்தின் முனையம் மூன்றில் கைது செய்யப்பட்டார்.

சம்பவம் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் நடந்தது.

சகபயணிகளுக்கு இடையூறு விளைவித்ததற்காகவும் விமானத்தின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் விடுத்ததற்காகவும் ரோமனுக்கு சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது.

ஆடவர் ரஷ்யாவில் இருந்து சிங்கப்பூர் வழி தாய்லந்துக்கு விடுமுறைக்குச் சென்று கொண்டிருந்தார்.

 

Top