Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

சிங்கப்பூர்

மலிவான விலையில் சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் விமானச்சீட்டுகள்... எப்படி?

சிங்கப்பூர் ஏர்லைன்ஸ், Flight Pass என்ற தள்ளுபடி விலையில் ஒன்றுக்கும் அதிகமான விமானச்சீட்டுகளை வாங்கும் சேவையை அறிமுகம் செய்துள்ளது.

வாசிப்புநேரம் -
மலிவான விலையில் சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் விமானச்சீட்டுகள்... எப்படி?

(படம்: AFP/Roslan RAHMAN)

சிங்கப்பூர் ஏர்லைன்ஸ், Flight Pass என்ற தள்ளுபடி விலையில் ஒன்றுக்கும் அதிகமான விமானச்சீட்டுகளை வாங்கும் சேவையை அறிமுகம் செய்துள்ளது.

அவ்வாறு வாங்கும் விமானச்சீட்டுகளை எதிர்காலப் பயணங்களுக்குப் பயன்படுத்திக்கொள்ளலாம்.

குடும்பத்தார், நண்பர்கள் என யாருடன் வேண்டுமானாலும் பகிர்ந்துகொள்ளலாம்.

சிங்கப்பூரிலிருந்து பிரான்ஸ், இத்தாலி, தென்கொரியா, ஸ்பெயின், நெதர்லந்து, பிரிட்டன் ஆகிய நாடுகளுக்குச் செல்லும் விமானச் சேவைகளுக்கு Flight Pass வழங்கப்படும்.

பின்னர், படிப்படியாக மற்ற இடங்களுக்கு விரிவுபடுத்தப்படும்.

விமானச்சீட்டுகளுக்கான கட்டணத்தை முன்கூட்டியே செலுத்திவிடவேண்டும்.

பின்னர், பயணங்களைத் திட்டமிடலாம்.

சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் இணையத்தளத்தில் Flight Passஐ பெற்றுக்கொள்ளலாம்.

-CNA/hs

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்