Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

சிங்கப்பூர்

COVID-19 தாக்கம் - புதிய ஊழியர்களைப் பணியில் அமர்த்துவதை நிறுத்தியுள்ளது சிங்கப்பூர் ஏர்லைன்ஸ்

சிங்கப்பூர் ஏர்லைன்ஸ், செலவுகளைக் குறைக்க புதிய ஊழியர்களைப் பணியில் அமர்த்துவதை நிறுத்துவது உள்ளிட்ட நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது.

வாசிப்புநேரம் -
COVID-19 தாக்கம் - புதிய ஊழியர்களைப் பணியில் அமர்த்துவதை நிறுத்தியுள்ளது சிங்கப்பூர் ஏர்லைன்ஸ்

(படம்: REUTERS/Edgar Su)

சிங்கப்பூர் ஏர்லைன்ஸ், செலவுகளைக் குறைக்க புதிய ஊழியர்களைப் பணியில் அமர்த்துவதை நிறுத்துவது உள்ளிட்ட நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது.

COVID-19 பரவலால் விமானத்துறை பாதிக்கப்பட்டுள்ளது அதற்குக் காரணம்.

வேலை தொடர்பான தேவையற்ற பயணங்களையும் நிறுவனம் தற்காலிகமாக ரத்து செய்துள்ளது.

பிப்ரவரியிலிருந்து மே இறுதிவரை சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் குழுமம், சுமார்9.9 விழுக்காடு அதாவது 3,000க்கும் மேற்பட்ட விமானப் பயணங்களைத் தற்காலிகமாக ரத்து செய்துள்ளது.

நிதியைச் சேமித்து கட்டணத்தைக் குறைக்க மற்ற நடவடிக்கைகள் மேற்கொண்டதோடு விநியோகிப்பாளர்கள், வர்த்தகப் பங்காளிகள் ஆகியோருடனும் தொடர்புகொண்டுள்ளதாக சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் கூறியுள்ளது.

பயணச் சேவை குறைவதால் பாதிக்கப்படும் பயணிகளுக்கு மாற்று ஏற்பாடுகள் செய்யப்படும் என்றும் நிறுவனம் கூறியுள்ளது.  

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்