Images
  • SIA (1)
    (படம்: AFP/ROSLAN RAHMAN)

சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் குழுமத்தின் ஆகஸ்ட் மாதப் பயணிகள் எண்ணிக்கை 98.3% சரிவு

சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் குழுமத்தின் ஆகஸ்ட் மாதப் பயணிகள் எண்ணிக்கை, ஆண்டு அடிப்படையில் 98.3% சரிவு கண்டுள்ளது.

சில நகரங்களுக்கான விமானச் சேவைகள் தொடங்கிய பின்னரும், இடைநிலைப் பயணிகளுக்கு அனுமதி வழங்கியும் பயணிகளின் எண்ணிக்கை அதிகரிக்கவில்லை.

சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் சேவையாற்றும் நகரங்களின் எண்ணிக்கையும் ஆண்டு அடிப்படையில் 90.5 விழுக்காடு குறைந்துள்ளது.

தற்போது 28 நகரங்களுக்கு மட்டுமே அது சேவையாற்றி வருகிறது.

ஜூலை மாதத்தில் அந்த எண்ணிக்கை 25 ஆக இருந்தது.

SilkAir, Scoot பயணிகளின் எண்ணிக்கை 99.3 விழுக்காடு குறைந்துள்ளது.

அண்மையில் சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் குழுமம் சுமார் 4,300 ஊழியர்களை ஆள்குறைப்புச் செய்வதாக அறிவித்தது.

COVID-19 நோய்ப்பரவலால், பயணங்களின் தேவை குறைந்துள்ளதால், விமான நிறுவனங்கள் தொடர்ந்து பாதிப்பைச் சந்தித்து வருகின்றன.

கிருமித்தொற்றால் இன்னும் பல நாடுகளில் பயணக் கட்டுப்பாடுகள் நடப்பில் உள்ளன.

அதுபோக எல்லைகளும் திறக்கப்படாததால் விமானச் சேவைகள் பெரிய அளவில் அடிவாங்கியுள்ளன. 

Top