Images
  • sia
    படம்: Reuters

சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் விமான நிறுவன ஊழியர்களின் சம்பளம் 10 % குறைப்பு

சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் விமான நிறுவன நிர்வாக ஊழியர்களின் சம்பளம், கணிசமாகக் குறைக்கப்படவுள்ளது.

நிறுவனத்தின் மற்ற ஊழியர்களது சம்பளம், 10 விழுக்காடு குறைக்கப்படும்.

இந்த நிதியாண்டின் முதல் காலாண்டில், நிறுவனம் ஆகப் பெரிய நிதி இழப்பை எதிர்நோக்கியதால், அந்த முடிவு எடுக்கப்பட்டது.

நிறுவனத்துக்கு ஒரு பில்லியன் வெள்ளிக்கும் அதிகமான நட்டம் ஏற்பட்டது.

அதன் விளைவாக, ஊழியர்களுடைய சம்பளத்தின் ஒருபகுதியான மாதாந்தர மாறுவிகித அம்சத்தொகை, அடுத்த மாதத்திலிருந்து நிறுத்தப்படும்.

நிர்வாகப் பதவிக்குக்கீழ் உள்ள ஊழியர்களின் அடிப்படைச் சம்பளத்தில் அது 10 விழுக்காடு.

மேலாளர்கள், 12 விழுக்காட்டிற்கும் அதிகமான சம்பளக் குறைப்பை, எதிர்நோக்குவர்.

தலைமை நிர்வாக அதிகாரியின் சம்பளத்தில், 35 விழுக்காடு குறைக்கப்படும்.

தகுதியுள்ள தரைச்சேவை ஊழியர்களுக்கும் விமானிகளுக்கும், விருப்ப ஓய்வு பெறும் வாய்ப்பு வழங்கப்படும்.

 

Top