Images
  • sia
    கோப்புப் படம்: Reuters

சிங்கப்பூர்-ஹாங்காங் விமானச் சேவை ஒத்திவைப்பு - வாடிக்கையாளர்கள் முழுக் கட்டணத்தைத் திரும்பப் பெற்றுக்கொள்ளலாம்: SIA

சிங்கப்பூர்- ஹாங்காங் இடையிலான பயணங்களுக்கு முன்பதிவு செய்திருக்கும் பயணிகள், முழுக் கட்டணத்தையும் திரும்பப் பெற்றுக்கொள்ளலாம் என்று சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் (SIA) நிறுவனம் தெரிவித்துள்ளது.

வாடிக்கையாளர்கள், பயணத்தை ரத்துசெய்வதற்கான கட்டணத்தைச் செலுத்தத் தேவையில்லை என்றும் அது கூறியது.

இரு நகரங்களுக்கும் இடையிலான கட்டுப்படுத்தப்பட்ட பயணமுறை இரு வாரங்களுக்கு ஒத்திவைக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டதை அடுத்து நிறுவனம் அவ்வாறு கூறியது.

விமானச் சேவைக்கான சிறப்பு ஏற்பாடு நாளை தொடங்கவிருந்தது.

வாடிக்கையாளர்களின் சுகாதாரத்திற்கும் பாதுகாப்பிற்கும் முன்னுரிமை அளிப்பதாகவும், பயணமுறை ஒத்திவைப்பு குறித்த அதிகாரிகளின் முடிவை ஆதரிப்பதாகவும் நிறுவனம் சொன்னது.

பாதிக்கப்பட்ட வாடிக்கையாளர்களைத் தொடர்புகொண்டு வருவதாகவும் சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் நிறுவனம் குறிப்பிட்டது.

சிங்கப்பூர்-ஹாங்காங் இடையிலான பயண ஏற்பாட்டில், சிங்கப்பூர் ஏர்லைன்ஸும் Cathay Pacific-உம் விமானச் சேவைகளை வழங்கவிருந்தன. 

Top