Images
  • F1 SQ (1)
    (படம்: Singapore Airlines)

சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் நவம்பர் முதல் சிங்கப்பூரிலிருந்து லாஸ் ஏஞ்சலிஸுக்கு இடைநில்லாச் சேவை

சிங்கப்பூர் ஏர்லைன்ஸ், வரும் நவம்பர் 2ஆம் தேதி முதல் சிங்கப்பூரிலிருந்து அமெரிக்க நகரமான லாஸ் ஏஞ்சலிஸுக்கு இடைநில்லாச் சேவை வழங்கப் போவதாக (ஜூலை 11) அறிவித்துள்ளது. 

புதிய Airbus A350-900ULR விமானம் அதற்குப் பயன்படுத்தப்படும்.

SQ38 என்ற எண் கொண்ட சேவை, தொடக்கத்தில் புதன்கிழமை, வெள்ளிக்கிழமை, ஞாயிற்றுக்கிழமை ஆகிய 3 நாட்களில் சிங்கப்பூரிலிருந்து லாஸ் ஏஞ்சலிஸுக்குச் செல்லும்.

நவம்பர் 9ஆம் தேதியிலிருந்து அச்சேவை அன்றாடம் இடம்பெறும் என்று சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் குறிப்பிட்டது.

மேலும் ஒரு A350-900ULR விமானத்துடன் அன்றாடச் சேவை தொடங்கும்.

டிசம்பர் 7ஆம் தேதி முதல், SQ36 என்ற எண் கொண்ட சேவையும் அந்தப் பாதையில் அறிமுகப்படுத்தப்படும். அது வாரத்துக்கு மூன்று முறை லாஸ் ஏஞ்சலிஸுக்குச் செல்லும்.

அதனையும் சேர்த்து, சிங்கப்பூரிலிருந்து லாஸ் ஏஞ்சலிஸுக்கு வாரம் 10 இடைநில்லா விமானச் சேவைகள் வழங்கப்படும். 

Top