Images
  • sicci (1)
    (படம்: யாஸ்மின் பேகம்)

கேம்பல் லேனில் தேசிய தினப் பற்றுறுதி நிகழ்ச்சி

SICCI எனப்படும் சிங்கப்பூர் இந்திய வர்த்தக, தொழிற்சபை, லிட்டில் இந்தியாவிலுள்ள கேம்பல் லேனில் தேசியதினப் பற்றுறுதி நிகழ்ச்சியை நடத்தியுள்ளது.

லிட்டில் இந்தியாவில் செயல்படும் வர்த்தகர்களிடையே நிலவும் இன, சமய ஒற்றுமையை எடுத்துக்காட்டுவது அதன் நோக்கம்.

சிங்கப்பூரின் 54வது பிறந்தநாளை முன்னிட்டு, அந்த நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டது.

இந்திய சமூகத்தை மேம்படுத்துவதற்கு முக்கியப் பங்காற்றும் ஒன்பது அமைப்புகளைச் சேர்ந்தவர்கள் நிகழ்ச்சியில் கலந்துகொண்டனர்.

லிஷா எனப்படும் லிட்டில் இந்தியா கடைக்காரர்கள், மரபுடைமைச் சங்கம், இந்து அறக்கட்டளை வாரியம், இந்திய முஸ்லிம்கள் சம்மேளனம், சிங்கப்பூர் சீக்கிய இளையர் சங்கம், சிங்கப்பூர் இந்தியர் சங்கம், கடையநல்லூர் முஸ்லிம் லீக்-ஆகியவை அவற்றுள் சில.

வெளியுறவு அமைச்சர் டாக்டர் விவியன் பாலகிருஷ்ணன், பற்றுறுதி நிகழ்ச்சியில் பங்கேற்றார்.

இந்த ஆண்டு தேசியதின அணிவகுப்பின் கருப்பொருள், "நமது சிங்கப்பூர்".

இந்திய சமூகத்தின் வெவ்வேறு அமைப்புகள் ஒன்றிணைந்து இந்தப் பற்றுறுதி நிகழ்ச்சியில் பங்கேற்றது, அணிவகுப்பின் கருப்பொருளைப் பிரதிபலிக்கும் வகையில் அமைந்தது.

அத்தகைய ஒன்றிணைப்பின் மூலம், அமைப்புகளிடையே தொடர்புகள் வலுப்பெற்று சமூகத்திற்குக் கிடைக்கும் பலன்கள் பெருகுமென, வர்த்தக, தொழிற்சபை நம்புகிறது. 

Top