Images
  • sicci (1)

தெற்காசிய நாடுகளில் முதலீடு செய்யவிரும்பும் சிங்கப்பூர் நிறுவனங்களுக்குக் கைக்கொடுக்கும் புதிய முயற்சி

துணைப் பிரதமர் ஹெங் சுவீ கியெட், மனிதவளத்தைப் பெரிதும் நம்பியிருக்கும் சிங்கப்பூருக்கும், அதன் பொருளியல் வளர்ச்சிக்கும் புத்தாக்கம் முக்கியமானது என்று கூறியுள்ளர்.

சிங்கப்பூர் இந்தியர் வர்த்தகத் தொழிற்சபையின் விருது வழங்கும் நிகழ்ச்சியில் பேசிய திரு. ஹெங், தண்ணீர், உணவு போன்ற துறைகளில் சிங்கப்பூர் கண்டுள்ள முன்னேற்றத்தைச் சுட்டினார்.

இதற்கிடையே, இந்தியா உள்ளிட்ட தெற்காசிய நாடுகளில் முதலீடு செய்யவிரும்பும் சிங்கப்பூர் நிறுவனங்களுக்குக் கைகொடுக்க சிங்கப்பூர் இந்தியர் வர்த்தகத் தொழிற்சபை புதிய பிரிவை அமைக்கத் திட்டமிடுகிறது.

அனைத்துலக வர்த்தகப் பிரிவு எனும் அது முதலில் இந்தியாவை இலக்காகக் கொண்டு இயங்கும்.

தொழிற்சபையின் புதிய வர்த்தகப் பிரிவு என்டர்பிரைஸ் சிங்கப்பூர் உள்ளிட்ட சில அமைப்புகளுடன் இணைந்து செயல்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.  

Top