Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

சிங்கப்பூர்

நெருக்கடிக் காலத்தில் சிங்கப்பூர் இந்திய வர்த்தங்களுக்கு உதவ சிறப்புப் பணிக்குழு

COVID-19 நோய்ப்பரவல் காலத்தில், சிங்கப்பூர் இந்திய வர்த்தங்களுக்கு உதவ, சிங்கப்பூர் இந்திய வர்த்தக, தொழிற்சபையின் பணிக்குழு ஒரு மாத காலம் லிட்டில் இந்தியாவில் உள்ள வர்த்தகங்களுக்கு அதன் சேவைகளைப் பற்றி எடுத்துரைக்கவுள்ளது.

வாசிப்புநேரம் -
நெருக்கடிக் காலத்தில் சிங்கப்பூர் இந்திய வர்த்தங்களுக்கு உதவ சிறப்புப் பணிக்குழு

படம்: Sharaladevi

COVID-19 நோய்ப்பரவல் காலத்தில், சிங்கப்பூர் இந்திய வர்த்தங்களுக்கு உதவ, சிங்கப்பூர் இந்திய வர்த்தக, தொழிற்சபையின் பணிக்குழு ஒரு மாத காலம் லிட்டில் இந்தியாவில் உள்ள வர்த்தகங்களுக்கு அதன் சேவைகளைப் பற்றி எடுத்துரைக்கவுள்ளது.

படம்: Sharaladevi

இன்று (ஆகஸ்ட் 29) முதல் அடுத்த மாதம் 30ஆம் தேதிவரை, லிட்டில் இந்தியா வட்டாரத்தில் உள்ள சுமார் 300 நிறுவனங்களுக்கு உதவத் திட்டமிடப்படுகிறது.

மின்னிலக்க உருமாற்றம், அரசாங்க மானியம்பெற விண்ணப்பித்தல், அமைப்பின் ஆதரவுத் திட்டங்கள் வழி நோய்ப்பரவல் காலத்தில் வணிகத்தை எப்படி நிலைத்திருக்கச் செய்வது-ஆகியவை தொடர்பான ஆலோசனைகளை, பணிக்குழு வழங்கும்.

படம்: Sharaladevi

கடைக்காரர்கள், வர்த்தக உதவி மட்டுமின்றி, எவ்வாறு மனநல ஆதரவு பெறுவது என்பதுபற்றியும் எடுத்துரைக்கப்படும். 

மே மாதத்திலிருந்து இயங்கி வரும் பணிக்குழு இந்திய வர்த்தகங்களுக்குக் குரல் எழுப்பும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது.

அரசாங்கம் வழங்கும் உதவித் திட்டங்கள் குறித்து, தொழிற்சபையின் உதவி எண்ணுக்குச் சுமார் 1,700 அழைப்புகள் வந்ததாகத் தெரிவிக்கப்பட்டது.

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்