Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

சிங்கப்பூர்

"நிச்சயமாகக் கிம்மை வெள்ளை மாளிகைக்கு அழைக்கப் போகிறேன்" : டிரம்ப்

அதிபர் டிரம்ப்புக்கு நன்றி தெரிவித்துக்கொண்ட வட கொரியத் தலைவர் கிம்,

வாசிப்புநேரம் -
"நிச்சயமாகக் கிம்மை வெள்ளை மாளிகைக்கு அழைக்கப் போகிறேன்" : டிரம்ப்

(படம்:Reuters)

அமெரிக்க அதிபர் டோனல்ட் டிரம்ப்பும், வட கொரியத் தலைவர் கிம் ஜொங் உன்னும் வரலாற்றுச் சிறப்புமிக்க சந்திப்புக்கு பிறகு,
மிக முக்கியமான விரிவான ஆவணத்தில் கையெழுத்திட்டுள்ளனர்.

பகலுணவுக் கூட்டத்தில் கலந்துகொண்ட பிறகு இருவரும் செய்தியாளர்களைச் சந்தித்தனர்.

(படம்:REUTERS)

ஆவணத்தில் கையெழுத்திட்டது தங்களுக்குப் பெருமைக்குரிய ஒன்று என்றும் இருவரிடையே, நல்லுறவு இருந்ததாகவும் அதிபர் டிரம்ப் தெரிவித்தார்.

அதிபர் டிரம்ப்புக்கு நன்றி தெரிவித்துக்கொண்ட வட கொரியத் தலைவர் கிம்,உலகம் ஒரு புதிய மாற்றத்தைப் பார்க்கும் என்றார்.

(படம்:Reuters)

பெரிய, ஆபத்தான பிரச்சினையை, கையெழுத்தான ஆவணம் பார்த்துக் கொள்ளும் என்றார் அதிபர் டிரம்ப்.

உச்சநிலைச் சந்திப்பு சிறப்பாக அமைந்ததில் தமக்கு மகிழ்ச்சி என்றார் அவர்.

(படம்:Reuters)

நிச்சயமாக வட கொரியத் தலைவரை வெள்ளை மாளிகைக்கு அழைக்க போவதாகச் செய்தியாளர் கூட்டத்தில் எழுப்பப்பட்ட கேள்விக்கு அதிபர் டிரம்ப் பதில் அளித்தார்.  

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்