Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

சிங்கப்பூர்

சிங்கப்பூரும் பிலிப்பீன்ஸும் 8 இணக்கக் குறிப்புகளில் கையெழுத்திட்டுள்ளன

சிங்கப்பூரும் பிலிப்பீன்ஸும் பல துறைகளில் இணைந்து செயல்பட வகைசெய்யும் 8 இணக்கக் குறிப்புகளில் கையெழுத்திட்டுள்ளன.

வாசிப்புநேரம் -
சிங்கப்பூரும் பிலிப்பீன்ஸும் 8 இணக்கக் குறிப்புகளில் கையெழுத்திட்டுள்ளன

படம்: AFP / TED ALJIBE

(வாசிப்பு நேரம்: 1 நிமிடத்திற்குள்)

சிங்கப்பூரும் பிலிப்பீன்ஸும் பல துறைகளில் இணைந்து செயல்பட வகைசெய்யும் 8 இணக்கக் குறிப்புகளில் கையெழுத்திட்டுள்ளன.

கிராமப்புற வேளாண் தொழில்நுட்பம் , தண்ணீர் நிர்வாகம், மின்சார விநியோகம், கலை, கலாசாரம், தகவல் பாதுகாப்பு ஆகியவை குறித்து இணக்கக் குறிப்புகள் அமைந்தன.

அந்த ஒப்பந்தங்கள் அதிபர் ஹலிமா யாக்கோப்பின் பிலிப்பீன்ஸ் பயணத்தின்போது கையெழுத்தாயின.

அவர் பிலிப்பீன்ஸுக்கு 5 நாள் அதிகாரத்துவப் பயணம் மேற்கொண்டிருக்கிறார்.

திருவாட்டி ஹலிமாவின் பயணத்தின்போது, இரு நாட்டு அதிகாரிகளுக்கிடையிலான சந்திப்பும் இருநாட்டுத் தலைவர்கள் சந்திப்பும் இடம்பெற்றன.

திருவாட்டி ஹலிமா இரண்டு அம்சங்களில் முன்னேற்றங்களைக் காண விரும்புவதாகக் கூறினார்.

இரட்டை வரிவிதிப்பைத் தவிர்க்கும் தற்போதுள்ள ஒப்பந்தத்தைப் புதுப்பித்தல், இருதரப்பு விமானப் போக்குவரத்து ஒப்பந்தத்தை விரிவுபடுத்துதல் ஆகியவை அந்த இரண்டு அம்சங்கள்.


விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்