Images
  • help

சமூகத்திற்குத் தொண்டூழியும் புரியும் ஐவர் கௌரவிக்கப்பட்டுள்ளனர்

சிங்கப்பூர்ப் பொதுமக்கள் சங்கம், சமூகத்திற்குத் தொண்டூழியம் புரியும் ஐவரைக் கௌரவித்துள்ளது.

Singapore Silent Heroes 2021 எனும் விருது நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தனராக நிதியமைச்சர் லாரன்ஸ் வோங் கலந்துகொண்டார்.

விருதுக்குச் சுமார் 50 நியமனங்கள் பெறப்பட்டன.
அதில் 16 பேர் இறுதிச் சுற்றுக்குத் தகுதிபெற்றனர்.

விருதுகள் பற்றி சிங்கப்பூர்ப் பொதுமக்கள் சங்கத் தலைவர் திரு MP செல்வம் இவ்வாறு கூறுகிறார்.

இவ்வாண்டு 8ஆவது முறையாக வழங்கப்பட்டுள்ள இவ்விருது, எந்தப் பலனையும் எதிர்பாராமல், சமூகத்துக்கும் நாட்டுக்கும் நல்லது செய்வோரை கௌரவிக்கும் வண்ணம் அமைகிறது

Singapore Silent Heroes விருதுகளுக்கான தகுதிகளையும் திரு செல்வம் விவரித்தார்.

விருது பெறுவோரைத் தேர்ந்தெடுக்கும் குழு, நியமனம் செய்யப்பட்டவர்களில் யார் குறைந்தது 2 ஆண்டுகளாகத் தொடர்ந்து சேவை செய்கின்றனர், யார் சுயநலன் கருதாது பிறருக்கு உதவி வருகிறார்கள் என்பதை எல்லாம் கருத்திற்கொள்கிறது

Hearts Of Humanity, Outstanding Adult, Pioneer Of Promise, Inspiring Youth, Compassionate Foreigner, என 5 பிரிவுகளில், ஒவ்வொரு பிரிவிலும் ஒருவருக்கு விருது வழங்கப்பட்டது.  

Top