Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

சிங்கப்பூர்

அசாதாரணப் பணிகளை மேற்கொள்ளும் சாதாரணத் தனிநபர்களை அங்கீகரிக்க வாய்ப்பு

அசாதாரணப் பணிகளை மேற்கொள்ளும் சாதாரணத் தனிநபர்கள் பலர் நம்மிடையே இருக்கின்றனர்.

வாசிப்புநேரம் -

(வாசிப்பு நேரம்: 1 நிமிடத்திற்குள்)

அசாதாரணப் பணிகளை மேற்கொள்ளும் சாதாரணத் தனிநபர்கள் பலர் நம்மிடையே இருக்கின்றனர்.

அத்தகையோருக்கு அங்கீகாரம் வழங்கி வருகிறது, Silent Heroes எனும் உன்னத உள்ளங்கள் விருது நிகழ்ச்சி.

Civilians Association of Singapore அமைப்பு ஏற்பாடு செய்யும் விருது நிகழ்ச்சி, ஆறாவது ஆண்டாக நடைபெறவிருக்கிறது. அதற்கான நியமனங்களை இன்று முதல் சமர்ப்பிக்கலாம்.

விருது பற்றிக் கூறுகிறார், Civilians Association of Singapore அமைப்பின் தலைவரும், விருது நிகழ்ச்சியின் ஏற்பாட்டுக் குழுத் தலைவருமான திரு MP செல்வம்.

ஒரு கனிவுமிக்க, பரிவுமிக்க சமுதாயத்தை உருவாக்குவதே அடிப்படை நோக்கம்...அது தனிமனிதர்களிடையே துவங்க வேண்டும் என்று எண்ணினோம்.

விருதுகள் வரும் ஆகஸ்ட் மாதம் 31ஆம் தேதி நடைபெறும் சிறப்பு நிகழ்ச்சியில் வழங்கப்படும்.

எந்த ஒரு அங்கீகாரத்தையோ வருமானத்தையோ அல்லது விளம்பரத்தையோ எதிர்பார்க்காமல் மற்றவர்களுக்கு உதவும் உன்னத உள்ளங்கள் நம்மிடையே உள்ளனர். அவர்களை அடையாளம் கண்டு, கௌரவித்து அவர்களின் மூலமாக மற்றவர்களுக்கு ஊக்கம் அளிப்பதே விருதின் நோக்கம்

விருதின் தொடர்பில், Caring & Sharing: Who are Silent Heroes? எனும் தலைப்பில் சிறப்புக் கருத்தரங்கு இன்று நடைபெறுகிறது.


விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்