Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

சிங்கப்பூர்

தலைமைத் தாதியாக விரும்பும் 4 பிள்ளைகளின் தாயாருக்கு SINDA-வின் உன்னத விருது

SINDA எனும் சிங்கப்பூர் இந்தியர் மேம்பாட்டுச் சங்கத்தின் உன்னத விருதை முன்னெப்போதும் இல்லாத அளவில், இவ்வாண்டு சுமார் 650 மாணவர்கள் பெற்றுள்ளனர்.

வாசிப்புநேரம் -

SINDA எனும் சிங்கப்பூர் இந்தியர் மேம்பாட்டுச் சங்கத்தின் உன்னத விருதை முன்னெப்போதும் இல்லாத அளவில், இவ்வாண்டு சுமார் 650 மாணவர்கள் பெற்றுள்ளனர்.

விருது பெறும் மாணவர்களின் எண்ணிக்கை இவ்வாண்டு 26 விழுக்காடு உயர்ந்துள்ளது.

மொத்தம் 19 பிரிவுகளில் விருதுகள் வழங்கப்பட்டன.

கல்வி, கலை, விளையாட்டு, தொழில்நுட்பத் திறன்கள் ஆகியவற்றோடு புதிதாக, அனைத்துலக-தேசிய நிலைப் போட்டிகள் என்ற பிரிவிலும் விருதுகள் வழங்கப்பட்டன.

உலக அரங்கில், வெவ்வேறு துறைகளில் சிங்கப்பூரைப் பிரதிநிதித்த மாணவர்களை அவை அங்கீகரித்தன.

விருது பெற்ற மாணவர்களில் சுமார் 20 விழுக்காட்டினர் சிண்டாவின் திட்டங்கள் வழி பயன்பெற்றவர்கள்.

சிண்டாவின் உன்னத விருது பெற்றவர்களில் ஒருவர் கௌசல்யா செல்வகுமார்.

தொழில்நுட்பக் கல்விக் கழக Nitec பிரிவில் வென்ற இவருக்கு, 4 பிள்ளைகள்.

ஆனால் தலைமைத் தாதியராக வேண்டும் என்ற அவருடைய ஆசைக்கு அது ஒரு தடையாக இல்லை.

மேலும் அறிந்தது 'செய்தி'. 

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்