Images

பெண்களுக்கான முதல் காற்பந்து அணியை ஆரம்பித்துள்ளது சிண்டா

சிண்டா எனப்படும் சிங்கப்பூர் இந்தியர் மேம்பாட்டுச் சங்கம், பெண்களுக்கான அதன் முதல் காற்பந்து அணியை ஆரம்பித்துள்ளது.

13 வயதிலிருந்து 21 வயது வரையிலான பெண்கள் அந்த அணியில் சேர்ந்து பயிற்சி பெறலாம்.

ஆண்களைப் போலவே பெண்களும் காற்பந்து விளையாட்டில் சிறந்து விளங்குவதற்காக இந்தத் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது என்று தொண்டூழியர்கள் குறிப்பிட்டனர்.

விளையாட்டு மூலம் பெண்களுக்குத் தன்னம்பிக்கையும் நற்பண்புகளும் கற்பிக்கப்படுவதாக அவர்கள் தெரிவித்தனர்.

பயிற்சி பத்துப் பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டு ஒவ்வொரு சனிக்கிழமையும் மதியம் ஒரு மணியில் இருந்து மூன்று மணிவரை தற்போது நடந்து வருகிறது.

பயிற்சியில் சேர்வது இலவசம்.

Top