Images
  • sinda leadership programme
    (படம்: ஷரளா தேவி)

தலைமைத்துவ பண்புகளை வளர்க்கும் திட்டங்களால் பயனடையும் மாணவர்கள்

இளையர்களிடையே தலைமைத்துவப் பண்புகளை வளர்க்கும் இரண்டு திட்டங்களை சிண்டா ஆண்டுதோறும் நடத்தி வருகிறது.

தொழில்நுட்பக் கல்விக் கழக மாணவர்கள் அவற்றில் பங்கேற்று பயனடைகின்றனர்.

பிரதமர் அலுவலக அமைச்சரும், நிதி, கல்வி ஆகிய துறைகளுக்கான இரண்டாம் அமைச்சருமான குமாரி இந்திராணி ராஜா, மாணவர்களுடன் இன்று கலந்துரையாடினார்.

அங் மோ கியோ தொழில்நுட்பக் கல்விக் கழகத்தில் இன்று நடைபெற்ற நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக அவர் கலந்துகொண்டார்.

இளையர்கள் எதிர்நோக்கும் சவால்கள், அவர்களின் கருத்துகள், அக்கறைகள் ஆகியவற்றையும் சிண்டாவின் தலைவரான குமாரி இந்திராணி கேட்டறிந்தார். 

Top