Images
  • people stock

சிங்கப்பூர் ஊழியர்களுக்கு ஆதரவு வழங்க $16.3 பில்லியன் செலவிடும் அரசாங்கம்

சிங்கப்பூர் ஊழியர்களுக்கு ஆதரவு வழங்கும் வகையில், அரசாங்கம் 16.3 பில்லியன் வெள்ளி செலவிடவிருக்ககிறது.

மோசமடைந்து வரும் கிருமிப்பரவலைக் கையாள, தைரியமாக, மேலும் கடுமையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டியிருந்ததாக துணைப் பிரதமரும் நிதியமைச்சருமான ஹெங் சுவீ கியெட் தெரிவித்தார்.

கூடுதல் நிதியில் 15.1 பில்லியன் வெள்ளி ஊழியர்களுக்கும், 1.2பில்லியன் வெள்ளி சுயதொழில் செய்பவர்களுக்கும் செலவிடப்படும்.

--மோசமாகப் பாதிக்கப்பட்டுள்ள விமானத்துறைக்கும் பயணத்துறைக்கும் வேலை ஆதரவு திட்டத்தின் கீழ் அரசாங்கம் செலுத்தும் பங்கு 75 விழுக்காடு வரை அதிகரிக்கவுள்ளது.

--தகுதி பெறுவதற்கான மாதச் சம்பள வரம்பு 3,600 லிருந்து 4,600 வெள்ளிக்கு உயர்த்தப்பட்டுள்ளது.

--வேலை ஆதரவு திட்டம் இந்த ஆண்டு இறுதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

--டாக்சி, தனியார் வாடகைக் கார் ஓட்டுநர்கள், சுயதொழில் செய்பவர்கள் ஆகியோருக்கு ஒன்பது மாதங்களுக்கு மாதந்தோறும் 1,000 வெள்ளி படித்தொகை வழங்கப்படும். 

Top