Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

சிங்கப்பூர்

தாமதமாகப் புறப்பட்ட சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் - பயணியின் குற்றச்சாட்டு பற்றி விசாரணை

சிங்கப்பூர் ஏர்லைன்ஸ், பயணிகளிடம் மரியாதையற்ற முறையில் நடந்ததாகக் கூறப்படும் விமானப் பணியாளர்கள் தொடர்பிலான குற்றச்சாட்டை விசாரித்து வருகிறது.

வாசிப்புநேரம் -
தாமதமாகப் புறப்பட்ட சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் - பயணியின் குற்றச்சாட்டு பற்றி விசாரணை

படம்: Facebook / Chandni Doulatramani

சிங்கப்பூர் ஏர்லைன்ஸ், பயணிகளிடம் மரியாதையற்ற முறையில் நடந்ததாகக் கூறப்படும் விமானப் பணியாளர்கள் தொடர்பிலான குற்றச்சாட்டை விசாரித்து வருகிறது.

இந்தியாவிற்கு சுமார் 3 மணி நேரம் தாமதமாகப் புறப்பட்டது SQ516 விமானம். தொழில்நுட்பக் கோளாறே அந்தத் தாமதத்திற்குக் காரணம் என்று தெரிவிக்கப்பட்டது.

கொல்கத்தாவிற்குப் புறப்பட்ட விமானத்தில் பயணம் செய்த பயணிகளில் ஒருவர் சண்டினி டௌலராமணி.

தாமதம் குறித்து விமானப் பணியாளர்களிடம் கேட்டபோது, அவர்கள் மரியாதையின்றி நடந்து கொண்டதாக அவர் கூறினார்.

அது குறித்த காணொளி சமூகத் தளங்களில் பகிரப்பட்டு வருகிறது.

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்