Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

சிங்கப்பூர்

சிங்கப்பூர்-ஜப்பான் இடையே விரைவில் அத்தியாவசிய வர்த்தகப் பயணங்கள்

சிங்கப்பூரும் ஜப்பானும் அத்தியாவசிய வர்த்தகப் பயணங்களை மீண்டும் தொடங்க இணக்கம் தெரிவித்துள்ளன. 

வாசிப்புநேரம் -
சிங்கப்பூர்-ஜப்பான் இடையே விரைவில் அத்தியாவசிய வர்த்தகப் பயணங்கள்

படம்: Ministry of Communications and Information of Singapore

சிங்கப்பூரும் ஜப்பானும் அத்தியாவசிய வர்த்தகப் பயணங்களை மீண்டும் தொடங்க இணக்கம் தெரிவித்துள்ளன.

அடுத்த மாதத் தொடக்கத்தில் அது குறித்த ஒப்பந்தம் உறுதிசெய்யப்படும்.

உரிய சுகாதாரப் பாதுகாப்பு நடைமுறைகளுடன் அந்தப் பயணங்கள் மேற்கொள்ளப்படும் என்று சிங்கப்பூரின் வெளியுறவு அமைச்சு தெரிவித்தது.

சிங்கப்பூர் வெளியுறவு அமைச்சர் விவியன் பாலகிருஷ்ணனும் ஜப்பானிய வெளியுறவு அமைச்சர் மொட்டேகி தோஷிமிட்சுவும் (Motegi Toshimitsu) அதனை வரவேற்றுள்ளனர்.

வர்த்தகக் காரணங்களுக்காக இருநாடுகளிடையே பயணம் மேற்கொள்ள விரும்புவோர் சிறப்பு 'Residence Track' திட்டத்தைப் பயன்படுத்தலாம்.

இருப்பினும், பயணிகள் 14 நாள்களுக்குக் கட்டாயம் வீட்டில் தங்கியிருக்க வேண்டும் என்று வெளியுறவு அமைச்சு வெளியிட்ட அறிக்கை குறிப்பிட்டது.

குறுகிய காலத்திற்குப் பயணம் செய்ய விரும்புவோர், Reciprocal Green Lane எனும் 'இருதரப்புத் தடையற்ற பயணமுறையைப்' பயன்படுத்தலாம்.

அதன் கீழ் அவர்கள் முதல் 14 நாள்களுக்குத் தங்களின் பயணப் பட்டியலில் திட்டமிட்டிருக்கும் இடங்களுக்கு மட்டுமே செல்ல முடியும்.  

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்