Images
  • chemical-1
    படம்: Vanessa Lim

சிங்கப்பூரும் மலேசியாவும் கூட்டு இரசாயனக் கசிவுப் பயிற்சி

சிங்கப்பூர்க் கடல்பகுதியில் கப்பல் மோதி 500 டன் அளவிலான இரசாயனக் கசிவு ஏற்பட்டால் என்ன நடக்கும்?

சிங்கப்பூர், மலேசிய அதிகாரிகள் இணைந்து இன்று (ஜூலை 12) நடத்திய கூட்டுப் பயிற்சி அதுபோன்ற கசிவை எதிர்கொள்ள தயார்நிலையில் இருப்பதற்கு உதவியது.


சிங்கப்பூர்க் கடல்துறை, துறைமுக ஆணையம், தேசியச் சுற்றுப்புற அமைப்பு ஆகியவற்றைச் சேர்ந்த 7 கப்பல்களும் 50 அதிகாரிகளும் பயிற்சியில் கலந்துகொண்டனர். அதில் மலேசியக் கடல்துறைப் பிரிவும் இணைந்து கொண்டது.

அதுபோன்ற சம்பவம் ஏற்பட்டால் பாதிக்கப்பட்ட குடியிருப்பாளர்களுக்கும் விவசாயிகளுக்கும் அதிகாரிகள் எவ்வாறு உதவலாம் என்பதைத் தெரிந்துகொள்ளவும் பயிற்சி வாய்ப்பளித்தது.


Top