Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

சிங்கப்பூர்

மறுபதிவு செய்யப்பட்ட தேசிய கீதம் அடுத்த வாரம் ஒலிபரப்பப்படும்

சிங்கப்பூரின் தேசிய கீதமான - Majulah Singapura பாடல் மறுபதிவு செய்யப்படுகிறது.

வாசிப்புநேரம் -
மறுபதிவு செய்யப்பட்ட தேசிய கீதம் அடுத்த வாரம் ஒலிபரப்பப்படும்

(படம்: TODAY)

சிங்கப்பூரின் தேசிய கீதமான - Majulah Singapura பாடல் மறுபதிவு செய்யப்படுகிறது.

இதற்கு முன்னதாக அது 2001ஆம் ஆண்டு பதிவுசெய்யப்பட்டது.

அதில் புதுப்பொலிவைச் சேர்க்கும் மறுபதிவு, உயர்ந்த தரத்தில் இருக்கும் என்று கூறப்பட்டது.

கலாசார, சமூக, இளையர் துறைக்கான அமைச்சர் திருவாட்டி கிரேஸ் ஃபூ இதனைத் தெரிவித்தார்.
Majulah Singapura.
பலரும் பாடிப் பழக்கப்பட்ட பாடல்.

அதுவும் தேசிய தின அணிவகுப்பில் அதைக் கேட்கும்போது மெய்சிலிர்க்கும்.

1959ஆம் ஆண்டு, டிசம்பர் 3ஆம் தேதி இந்தப் பாடல் சிங்கப்பூரின் தேசிய கீதமாக அறிமுகப்படுத்தப்பட்டது.

தேசியக்கொடி, கீதம், சின்னம் ஆகியவற்றை வெளியிட்ட 60வது ஆண்டின் நிறைவை அனுசரிக்கும் கொண்டாட்டங்களின் ஓர் அங்கமாகப் பாடலின் மறுபதிவு அமைகிறது.

1958ஆம் ஆண்டு, சிங்கப்பூரின் தேசிய கீதத்தை மறைந்த Zubir Said இசையமைத்தார்.

சிங்கப்பூர்ப் பல்லிய இசைக்குழு, பாடலின் மறுபதிவுக்குப் பொறுப்பேற்றுள்ளது.

அனைத்து உள்ளூர் வானொலி நிலையங்களும் வரும் செவ்வாய்க்கிழமையன்று தேசிய கீதத்தின் மறுபதிவை ஒலிபரப்பும்.
   

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்