Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

சிங்கப்பூர்

சிங்கப்பூர் ஆயுதப் படை முகாம்களில் அவசியமற்ற பயிற்சிகள் தற்காலிக நிறுத்தம்

சிங்கப்பூர் ஆயுதப் படை, தனது முகாம்களில் அவசியமற்ற பயிற்சிகளைத் தற்காலிகமாக நிறுத்தவுள்ளது.

வாசிப்புநேரம் -
சிங்கப்பூர் ஆயுதப் படை முகாம்களில் அவசியமற்ற பயிற்சிகள் தற்காலிக நிறுத்தம்

கோப்புப் படம்: Jeremy Long

சிங்கப்பூர் ஆயுதப் படை, தனது முகாம்களில் அவசியமற்ற பயிற்சிகளைத் தற்காலிகமாக நிறுத்தவுள்ளது.

இன்று தொடங்கி அந்தத் தடை, அடுத்த மாதம் 18ஆம் தேதிவரை நீடிக்கும் என்று தற்காப்பு அமைச்சு, தனது Facebook பதிவில் குறிப்பிட்டது.

அவசியமான பயிற்சிகள் மட்டும், கிருமித்தொற்றுக் கட்டுப்பாடுகளுடன் தொடரும் என்று தெரிவிக்கப்பட்டது.

அடிப்படை ராணுவப் பயிற்சி நிலையம் போன்ற பயிற்சிப் பள்ளிகள், மேம்பட்ட நடிவடிக்கைகளுடன் செயல்பாடுகளைத் தொடரும்.

தனிநபர் உடலுறுதிச் சோதனைகளும் தேசிய சேவை உடலுறுதி மேம்பாட்டுப் பயிற்சிகளும் தற்காலிகமாக நிறுத்தப்படும்.

தனிநபர் உடலுறுதிச் சோதனை, பயிற்சி நிறுத்தப்படும் வேளையில் நடைபெறத் திட்டமிடப்பட்டிருந்தால், ஒருமுறை அதிலிருந்து விலக்கு அளிக்கப்படும். 

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்