Images
  • singapore skyline
    (படம்: Reuters)

சிங்கப்பூரும், ஆஸ்திரேலியாவும் மின்னிலக்கப் பொருளியல் உடன்பாடு குறித்துப் பேச்சு நடத்துகின்றன

சிங்கப்பூரும், ஆஸ்திரேலியாவும் மின்னிலக்கப் பொருளியல் உடன்பாடு குறித்து ஆலோசித்து வருவதாக வர்த்தக, தொழில் அமைச்சர் சான் சுன் சிங் தெரிவித்துள்ளார்.

தகவல்களை ஆராயவும், பாதுகாப்பான இணையச் சூழலை ஊக்குவிக்கவும், தனிநபர் தகவல் பாதுகாப்பை மேம்படுத்தவும் உடன்படிக்கை வகைசெய்யும்.

பேங்காக்கில் ஆஸ்திரேலிய வர்த்தக, தொழில் அமைச்சர் சைமன் பர்மிங்ஹேமைச் (Simon Birmingham) சந்தித்தபோது திரு. சான் அது பற்றி அறிவித்தார்.

RCEP எனப்படும் ஒருங்கிணைந்த வட்டாரப் பொருளியல் பங்காளித்துவ உடன்பாடு பற்றிய கூட்டத்துக்கிடையே சிங்கப்பூர், ஆஸ்திரேலிய அமைச்சர்கள் சந்தித்தனர்.

மின்னிலக்க அடையாளம், மின்-கட்டண முறை, செயற்கை நுண்ணறிவு உட்பட பல்வேறு அம்சங்களில் உடன்பாடு கவனம் செலுத்தும்.

இருதரப்புப் பொருளியல் உறவை வலுப்படுத்துவதும், இருநாடுகளுக்கும் இடையிலான இணைப்பை மேம்படுத்துவதும் அந்த உடன்பாட்டின் நோக்கம்.

Top