Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

சிங்கப்பூர்

ஒரு மணி நேரத்தில் 951 burpee உடற்பயிற்சி -சிங்கப்பூரில் வசிக்கும் பிரேசிலியர் கின்னஸ் சாதனை

சிங்கப்பூரில் வசிக்கும் பிரேசிலியர் ஒருவர், 951 முறை பர்பீஸ் (burpees) எனும் உடற்பயிற்சியைச் செய்து கின்னஸ் சாதனை படைத்துள்ளார்.

வாசிப்புநேரம் -
ஒரு மணி நேரத்தில் 951 burpee உடற்பயிற்சி -சிங்கப்பூரில் வசிக்கும் பிரேசிலியர் கின்னஸ் சாதனை

Reuters/Joseph Campbell

சிங்கப்பூரில் வசிக்கும் பிரேசிலியர் ஒருவர், 951 முறை பர்பீஸ் (burpees) எனும் உடற்பயிற்சியைச் செய்து கின்னஸ் சாதனை படைத்துள்ளார்.

காசியானோ ரோட்ரிக்ஸ், (Cassiano Rodrigues) எனும் 35 வயது ஆடவர் அந்தச் சாதனையைப் படைத்துள்ளார்.

பர்பீஸ் உடற்பயிற்சி இளையர்களிடையே பிரபலமாக உள்ளது.

நிற்கும் நிலையில் தொடங்கி, கீழே குனிந்து, தரையில் கைகளை அழுத்தி, கால்களைப் பின்னால் கொண்டு சென்றுவிட்டு மீண்டும் அதே நிலைக்குத் திரும்புவது இந்த உடற்பயிற்சி.

ரோட்ரிக்ஸின் உடன்பிறப்புக்குக் கடுமையான இதய நோயுடன் சென்ற ஆண்டு குழந்தை பிறந்தது.

குழந்தையின் சிகிச்சைக்காக நிதி திரட்டும் முயற்சியில் ஈடுபட்டார் ரோட்ரிக்ஸ்.

அப்போது கின்னஸ் சாதனையும் படைக்கப்பட்டது.

இவ்வளவு சோர்ந்து போவேன் என்று நினைக்கவில்லை என்றார் ரோட்ரிக்ஸ்.

இருப்பினும் சாதனை படைத்ததில் அவருக்கு மகிழ்ச்சி.

முயற்சிக்கு இரண்டு நாட்களுக்கு முன்னர் ரோட்ரிக்ஸின் காலில் காயம் ஏற்பட்டது.

அவர் சுமார் ஒன்பது மாதங்கள் அதற்காகப் பயிற்சி செய்திருந்தார்.

மக்கள் ஆரோக்கியமான வாழ்க்கை முறையைப் பின்பற்ற வேண்டும்; லட்சியங்களை அடைய விடாமுயற்சியுடனும் கட்டுப்பாட்டுடனும் செயல்படவேண்டும் என்பதை ஊக்குவிக்க விரும்புவதாக அவர் தெரிவித்தார்.  

-Reuters

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்