Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

சிங்கப்பூர்

சிங்கப்பூருக்கு வந்துகொண்டிருந்த Scoot விமானம் சென்னைக்குத் திருப்பிவிடப்பட்டது

திருச்சியிலிருந்து, இன்று அதிகாலை புறப்பட்டு சிங்கப்பூருக்கு வந்துகொண்டிருந்த Scoot விமானம் ஒன்று சென்னை அனைத்துலக விமான நிலையத்துக்குத் திசை திருப்பிவிடப்பட்டது.  

வாசிப்புநேரம் -
சிங்கப்பூருக்கு வந்துகொண்டிருந்த Scoot விமானம் சென்னைக்குத் திருப்பிவிடப்பட்டது

படம்: AFP

(வாசிப்பு நேரம்: 1 நிமிடத்திற்குள்)

திருச்சியிலிருந்து, இன்று அதிகாலை புறப்பட்டு சிங்கப்பூருக்கு வந்துகொண்டிருந்த Scoot விமானம் ஒன்று சென்னை அனைத்துலக விமான நிலையத்துக்குத் திசை திருப்பிவிடப்பட்டது. 

TR567 விமானத்தின் சரக்குப்பகுதியில் புகை எச்சரிக்கை சமிக்ஞை எழுப்பப்பட்டது அதற்குக் காரணம். 

165 பயணிகள் கொண்ட விமானம் இந்திய நேரப்படி அதிகாலை மணி 3.40க்கு சென்னையில் பாதுகாப்பாகத் தரையிறங்கியது.

உடனடியாக விமானம் சோதிக்கப்பட்டதில், அது போலி எச்சரிக்கை என்பது தெரியவந்ததாக, Scoot நிறுவனம் தெரிவித்தது.

சென்னையிலிருந்து பயணிகளைச் சிங்கப்பூருக்கு அழைத்துவர மாற்று விமானம் ஒன்று தயார் செய்யப்பட்டது.

உள்ளூர் நேரப்படி பிற்பகல் மூன்றரை மணிக்கு அது சென்னையிலிருந்து புறப்பட்டது.

பயணிகளின் பாதுகாப்பு ஆக அதிக அக்கறைக்குரியது என்று குறிப்பிட்ட Scoot நிறுவனம், பயணிகளுக்கு ஏற்பட்ட வசதிக்குறைவுக்காக மன்னிப்புக் கேட்டுக்கொண்டது.

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்