Images
  • seithi skyline 2
    படம்: நித்திஷ் செந்தூர்

நிச்சயமற்ற உலகப் பொருளியல் சூழலில் சிங்கப்பூர் நம்பிக்கையுடன் உள்ளது: அமைச்சர் சீ ஹொங் டாட்

(வாசிப்பு நேரம்: 1 நிமிடத்திற்குள்)

நிச்சயமற்ற உலகப் பொருளியல் சூழலுக்கு இடையிலும் சிங்கப்பூர் நம்பிக்கையுடன் இருக்க காரணங்கள் உள்ளதாய், வர்த்தக, தொழில்துறை மூத்த துணை அமைச்சர் சீ ஹொங் டாட் கூறியுள்ளார்.

உலகில் அதிவேக வளர்ச்சி கண்டுவரும் வட்டாரங்களில் ஆசியாவும் ஒன்று என்பதை அவர் சுட்டினார்.

அந்த வளர்ச்சியைத் திறமையாகக் கையாண்டு அதனால் உருவாகக்கூடிய வர்த்தக வாய்ப்புகளைப் பயன்படுத்திக்கொள்ளும் நிலையில் சிங்கப்பூர் உள்ளதாய் அவர் சொன்னார்.

CNA938 வானொலியும், Canon நிறுவனமும் இணைந்து ஏற்பாடு செய்த Think Big தலைமைத்துவ வர்த்தகத் தொடரில் திரு. சீ பேசினார்.

அமெரிக்க-சீன வர்த்தகப் பதற்றம், மெதுவடைந்துவரும் பொருளியலை எதிர்கொள்ள நிறுவனங்கள் மேற்கொள்ள வேண்டிய முயற்சிகள் பற்றியும் கலந்துரையாடப்பட்டது.

ஈராண்டுக்கு ஒரு முறை இடம்பெறும் அந்த நிகழ்ச்சி இன்றும் நாளையும் நடைபெறுகிறது.

2030ஆம் ஆண்டுக்குள் உலகின் நான்காவது பெரிய வர்த்தகச் சந்தையாக ஆசியான் உருவெடுக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

அந்த அமைப்பில் சிங்கப்பூர் இடம்பெற்றுள்ளதால் பலவகையில் பலனடைய முடியும் என்றார் திரு. சீ.

அதன் மூலம் 1.5 விழுக்காட்டுக்கும் அதிகமான வளர்ச்சியை சிங்கப்பூர் எதிர்பார்க்கலாம் என அவர் கூறினார்.


Top