Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

சிங்கப்பூர்

இருநாட்டுப் பொருளியல் மீட்பை வலுப்படுத்தும் வழிகளை ஆராய்ந்த சிங்கப்பூர் - சீனத் தலைவர்கள்

சிங்கப்பூருக்கும் சீனாவுக்கும் இடையிலான வலுவான உறவைப் பிரதமர் லீ சியென் லூங்கும் சீன அதிபர் சி சின்பிங்கும் (Xi Jinping) மறுவுறுதி செய்துகொண்டுள்ளனர்.

வாசிப்புநேரம் -
இருநாட்டுப் பொருளியல் மீட்பை வலுப்படுத்தும் வழிகளை ஆராய்ந்த சிங்கப்பூர் - சீனத் தலைவர்கள்

(படம்: MCI)

சிங்கப்பூருக்கும் சீனாவுக்கும் இடையிலான வலுவான உறவைப் பிரதமர் லீ சியென் லூங்கும் சீன அதிபர் சி சின்பிங்கும் (Xi Jinping) மறுவுறுதி செய்துகொண்டுள்ளனர்.

இருநாட்டுப் பொருளியல் மீட்பை வலுப்படுத்தும் வழிகளையும், தலைவர்கள் தொலைபேசிவழி கலந்துரையாடியதாகச் சிங்கப்பூர் வெளியுறவு அமைச்சு தெரிவித்தது.

எல்லை கடந்த விநியோகத் தொடர்பு, வர்த்தகம், முதலீடுகள், அறிவார்ந்த நகரங்கள், பருவநிலை மாற்றம் உள்ளிட்ட அம்சங்களில் இருதரப்பு ஒத்துழைப்பை மேம்படுத்துவது குறித்து பேசப்பட்டதாகவும் கூறப்பட்டது.

சவால்மிகுந்த கிருமிப்பரவல் சூழலிலும் இருதரப்புப் பரிமாற்றம், ஒத்துழைப்பு வழி இருநாடுகளும் பலனடைந்துள்ளதை இருநாட்டுத் தலைவர்களும் மறுவுறுதிப்படுத்தினர்.

திரு. லீயும் திரு. சியும், இருதரப்பு ஒத்துழைப்புக்கான 17-ஆவது கூட்டு மன்றம் இவ்வாண்டு இறுதியில் தொடங்கப்படவுள்ளது.

அதை ஆவலோடு எதிர்பார்த்திருப்பதாகவும் தலைவர்கள் கூறினர்.

வட்டார, அனைத்துலக நிலவரம் குறித்தும் தலைவர்கள் கலந்துரையாடியதாக அமைச்சு குறிப்பிட்டது.

ஆசியான் - சீன உறவு குறித்த கலந்துரையாடலின் 30ஆம் ஆண்டு நிறைவையொட்டி நாடுகளுக்கு இடையிலான வலுவான உறவையும் தலைவர்கள் உறுதிசெய்தனர்.

- CNA/lk(gr) 

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்