Images
  • Singapore Christchurch
    (படம்:  AFP/Tessa Burrows)

நியூஸிலந்துத் துப்பாக்கிச் சூடு: ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக்கொள்ளும் சிங்கப்பூர்த் தலைவர்கள்

(வாசிப்பு நேரம்: 1 நிமிடத்திற்குள்)


நியூஸிலந்தின் கிரைஸ்ட்சர்ச் நகரில் நடந்த துப்பாக்கிச் சூட்டு சம்பவங்கள் குறித்து சிங்கப்பூர்த் தலைவர்கள் ஆழ்ந்த அனுதாபம் தெரிவித்துள்ளனர்.

துணைப் பிரதமரும், தேசியப் பாதுகாப்பு ஒருங்கிணைப்பு அமைச்சருமான திரு. தியோ சீ ஹியன் (Teo Chee Hean), அந்தத் தாக்குதலில் உயிரிழந்தோர், காயமடைந்தோர் ஆகியோரின் குடும்பத்தினருக்கு சிங்கப்பூரர்கள் தங்கள் அனுதாபங்களைத் தெரிவித்துக்கொள்வதாகக் கூறினார்.

அந்தத் தாக்குதலை வன்மையாகக் கண்டித்த வெளியுறவு அமைச்சர் விவியன் பாலகிருஷ்ணன், நியூசிலந்திற்கு, இந்த சிரமமான காலகட்டத்தில், சிங்கப்பூர் துணை நிற்கும் என்று உறுதியளித்தார்.

கிரைஸ்ட்சர்ச் நகரில் உள்ள சிங்கப்பூரர்கள் அனைவரும் பாதுகாப்பாக உள்ளனரா என்பதைக் கண்டறியும் பொருட்டு, வெளியுறவு அமைச்சு அவர்களைத் தொடர்புகொண்டு வருகிறது.

Top