Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

சிங்கப்பூர்

சாங்கி சிறைச்சாலையில் ஒரு கைதிக்கும், Takashimayaவில் பணிபுரியும் இன்னொருவருக்கும் சமூக அளவில் கிருமித்தொற்று

சமூக அளவில் கிருமித்தொற்று உறுதிசெய்யப்பட்ட இருவர், ஏற்கெனவே பாதிக்கப்பட்டவர்களுடன் தொடர்புடையவர்கள்.

வாசிப்புநேரம் -

சமூக அளவில் கிருமித்தொற்று உறுதிசெய்யப்பட்ட இருவர், ஏற்கெனவே பாதிக்கப்பட்டவர்களுடன் தொடர்புடையவர்கள்.

ஒருவர் முன்கூட்டியே தனிமைப்படுத்தப்பட்டிருந்தார். மற்றவர், கண்காணிப்பின் மூலம் அடையாளம் காணப்பட்டதாக, சுகாதார அமைச்சு தெரிவித்தது.

ஒருவர், சாங்கி சிறைச்சாலையைச் சேர்ந்த 40 வயதுக் கைதி.

சிறைச்சாலையில் பாதிக்கப்பட்ட சமயல்காரருடன் அவர் நெருங்கிய தொடர்பில் இருந்தவர்.

அவரையும் சேர்த்து அந்த கிருமித்தொற்றுக் குழுமத்தில் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை, 16 ஆக உயர்ந்துள்ளது.

மற்றொருவர், Takashimaya கடைத்தொகுதியின் St. Leaven ரொட்டிக் கடையில் பணிபுரியும் 40 வயது மலேசிய ஆடவர்.

அவர், ION Orchard, AMK Hub ஆகிய கடைத்தொகுதிகளின் Four Leaves ரொட்டிக் கடையில் பணிபுரிந்த பாதிக்கப்பட்ட மாதின் குடும்ப உறுப்பினர் என்று தெரிவிக்கப்பட்டது. 

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்